செங்கடலில் ஆழ்கடல் கேபிள்கள் துண்டிப்பு: மைக்ரோசாப்ட் பயனர்களுக்கு பாதிப்பு!
WEBDUNIA TAMIL September 07, 2025 02:48 PM

ஐரோப்பாவை செங்கடல் வழியாக ஆப்பிரிக்கா மற்றும் ஆசியாவுடன் இணைக்கும் பல சர்வதேச ஆழ்கடல் கேபிள்கள் துண்டிக்கப்பட்டுள்ளன. மைக்ரோசாப்ட் நிறுவனம் இந்த தகவலை உறுதிப்படுத்தியுள்ளது.

மைக்ரோசாப்டின் "Azure Cloud" மேகம் தளம் இதனால் பாதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக மைக்ரோசாப்டின் வாடிக்கையாளர்கள் சேவைகளை பெறுவதில் தாமதம் ஏற்படலாம் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

செங்கடலில் கடல் நீரோட்டங்கள் வலுவாக உள்ளதால், துண்டிக்கப்பட்ட கேபிள்களை சரிசெய்வது கடினமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Edited by Siva

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.