கார் பிரியர்களே மிஸ் பண்ணிடாதீங்க.. ஜிஎஸ்டி குறைப்பின் எதிரொலி: வாகனங்களின் விலை ரூ.1.45 லட்சம் வரை குறைப்பு: டாடா மோட்டார்ஸ் அறிவிப்பு..!
Seithipunal Tamil September 07, 2025 02:48 PM

56 வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் கார் மற்றும் மோட்டார் வாகனங்களுக்கு  ஜிஎஸ்டி வரி குறைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி,  ஜிஎஸ்டி மறுசீரமைப்பு எதிரொலியாக பயணிகள் வாகனங்களின் விலையை ரூ.65 ஆயிரம் முதல் ரூ.1.45 லட்சம் வரை குறைக்கப்படும் என டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

குறித்த ஜிஎஸ்டி சீரமைப்பு வரும் 22-ஆம் தேதி முதல் அமலுக்கு வரவுள்ளது. இதில் சிறிய ரக வாகனங்களுக்கு 18 சதவீத வரி விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்ட நிலையில், கார்களின் விலை கணிசமாக குறையும் என எதிர்பார்க்கப்பட்டது.

இந்நிலையில், மும்பையை தலைமையிடமாக கொண்டு செயல்படும் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் வாகனங்களின் விலையை குறித்து அறிவிப்பு வெளியிட்டுள்ளது. 

இதன்படி சிறிய கார் மாடலான

01- தியாகோ - ரூ.75 ஆயிரம்

02- டைகோர் - ரூ. 80 ஆயிரம்

03- ஆல்ட்ரோஸ் - ரூ.1.10 லட்சம் வரையில் விலை குறைய உள்ளது.

04- கர்வ்வி- ரூ.65 ஆயிரம்

05- ஹாரியர் மாடல் (எஸ்யுவி மாடல்)  ரூ.1.4 லட்சம் வரையிலும்,

06- சபாரி ரூ.1.45 லட்சம் வரையிலும் விலை குறைக்கப்படும் என அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.