ஐக்கிய நாடுகள் சபையின் 80வது பொதுச்சபைக் கூட்டம் வரும் செப்டம்பர் 9ஆம் தேதி நியூயார்க் நகரில் தொடங்குகிறது. அதனைத் தொடர்ந்து, செப்டம்பர் 23 முதல் 29ம் தேதி வரை உயர்மட்டக் கூட்டங்கள் நடைபெற உள்ளன.
இந்நிலையில், கூட்டத்தில் பங்கேற்போர் பட்டியலில் இருந்து பிரதமர் நரேந்திர மோடியின் பெயர் திடீரென நீக்கப்பட்டு, அவருக்கு பதிலாக வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் பங்கேற்க இருப்பது சர்வதேச வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கூட்டத்தில் உரையாற்றும் வரிசைப்படி:பிரேசில் பிரதிநிதி முதலாவதாக உரையாற்றுகிறார்.அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், செப்டம்பர் 23ஆம் தேதி உரையாற்றவுள்ளார்.இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர், செப்டம்பர் 27ஆம் தேதி இந்தியாவை பிரதிநிதித்துவப்படுத்தி உரையாற்றுகிறார்.
இந்தியா மீதான அமெரிக்காவின் 50% வரி விதிப்பு, ரஷ்யா மற்றும் சீனாவுடன் இந்தியாவின் வளர்ந்து வரும் நெருக்கம் போன்றவை உலக அரசியலில் பரபரப்பான விவாதங்களாக இருக்கும் நிலையில், மோடி ஐ.நா. கூட்டத்தில் நேரடியாக பங்கேற்காதது முக்கியத்துவம் பெறுகிறது.சர்வதேச அரங்கில், இந்தியாவின் அடுத்தகட்ட நிலைப்பாடு என்னவாக இருக்கும் என்ற ஆர்வம் அதிகரித்துள்ளது.