பாலஸ்தீனத்தில் உள்ள காசாவில் கடந்த சில மாதங்களாக இஸ்ரேல் தொடர்ந்து நடத்தி வரும் தாக்குதல் காரணமாக அப்பாவி மக்கள் உயிரிழந்து வருகின்றனர்.
தொடர்ந்த தாக்குதல்களால் காசா மக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், காசா திரைப்படமான ‘தி வாய்ஸ் ஆஃப் ஹிந்த் ரஜப்’ வெனிஸ் திரைப்பட விழாவில் திரையிடப்பட்டுள்ளது.
இந்தப் படத்திற்கு பார்வையாளர்கள் 23 நிமிடங்கள் எழுந்து நின்று கைகளைத் தட்டி இருக்கின்றனர். இது ஒரு சாதனையாகக் கருதப்படுகிறது. இதுதொடர்பான வீடியோவும் இணையத்தில் வைரலாகியுள்ளது.
கவுதர் பென் ஹனியா இயக்கிய இந்தப் படம், 2024 ஆம் ஆண்டு இஸ்ரேல் படைகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் காரில் இருந்த 6 வயது சிறுமி ஹிந்த் ரஜப் மற்றும் அவரது குடும்பத்தினர் கொல்லப்பட்ட சம்பவத்தைப் பற்றிப் பேசுகிறது.
இதுகுறித்து திரைப்பட விழாவில் பேசிய படத்தின் இயக்குநர் கவுதர் பென் ஹனியா,
“ஒரு குழந்தையின் கொலை மக்களுக்குள் பிளவுகளை ஏற்படுத்தக்கூடாது. இதைப் பற்றி பேச வேண்டிய நிலை வந்துவிட்டது என்பதே மிகக் கொடூரமானது.
இத்தகைய விஷயங்கள் ஒருபோதும் நடக்கக் கூடாது. இது ஒரு குற்றம், மிக மோசமான செயல். இந்தப் படம் ‘ஹிந்த் ரஜப்’ கொல்லப்பட்ட கதையைச் சொல்கிறது,” என்று தெரிவித்துள்ளார்.
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...
https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR