மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் 56-வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் நடைபெற்றது. அப்போது ஜிஎஸ்டி வரி சீர்திருத்தம் செய்யப்பட்டு, வரி குறைக்கப்பட்டது. ஜிஎஸ்டி வரி குறைக்கப்பட்டுள்ள நிலையில், பொருட்களின் விலை குறைக்கப்பட்டதா? என்பதை ஆய்வு செய்வதே தன்னுடைய முதன்மையான வேலை என்று நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
ஜிஎஸ்டி வரிவிதிப்பு முறையில் மிகப்பெரிய மாற்றத்தை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்ததோடு, மக்களின் அன்றாட பயன்பாட்டு பொருட்களுக்கு வரி விலக்கும், பல்வேறு பொருட்களுக்கான வரியையும் குறைத்து அதிரடியான அறிவிப்பை வெளியிட்டார்.
எதிர் வரும் செப்டம்பர் 22-ஆம் தேதி முதல் பொருட்களின் விலை குறைப்பு நடவடிக்கையில் நிறுவனங்கள் ஈடுபடுகின்றனவா என்பதை கண்காணிக்க இருப்பதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும், கூறியுள்ளதாவது:
ஜிஎஸ்டி வரி குறைப்பு நடவடிக்கை வரும் செப்டம்பர் 22-ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. இது தொடர்பாக தொழில் மற்றும் வணிகத் துறையினருடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறதாகவும், இந்த வரி குறைப்பினால் ஏற்பட்ட பொருட்களின் விலை குறைப்பு பலனை வாடிக்கையாளர்களுக்கு அளிப்போம் என்று அவர்கள் உறுதியளித்துள்ளனர் என்று கூறியுள்ளார்.
எனவே, தொழில்துறை மற்றும் வணிகத்துறையினரிடம் இருந்து நான் நேர்மறைத்தன்மையைக் காண்கிறேன் என்றும், நிச்சயமாக அவர்கள் விலையை குறைத்து, வாடிக்கையாளர்களுக்கு பலனை அளிப்பார்கள் என்று எனக்கு முழு நம்பிக்கை உள்ளது என தெரிவித்துள்ளார்.
மேலும், செப்டம்பர் 22-ஆம் தேதி முதல் பொருட்களின் விலை குறைப்பு பலன் வாடிக்கையாளர்களுக்கு கிடைக்கிறதா என்பதைக் கவனிப்பதே என்னுடைய வேலையாக இருக்கும் நிர்மலா சீதாராமன் எனவும் கூறியுள்ளார்.