விநாயகா் சிலை கரைப்பில் சோகம்... 9 போ் நீரில் மூழ்கி பலி, 12 பேர் மாயம்!
Dinamaalai September 08, 2025 12:48 PM

 


 
விநாயகா் சதுா்த்தி விழா நேற்று செப்டம்பர் 7ம் தேதி ஞாயிற்றுக்கிழமை நிறைவடைந்தது. இதையொட்டி மகாராஷ்டிர மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் அமைக்கப்பட்டிருந்த விநாயகா் சிலைகளை கரைக்கும் பணிகள் நடைபெற்றன. அந்த பணிகளில்  9 போ் நீரில் மூழ்கி பலியாகினா்.

இவா்களில் 4 பேரின் உடல்கள் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர். மேலும்   12 போ் மாயமாகி இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. 

 
அதன்படி தாணே, புணே, நாசிக், ஜல்கான், வாஷிம், பால்கா், அமராவதி உள்ளிட்ட மாவட்டங்களில் அமைக்கப்பட்டிருந்த சிலைகள் ஞாயிற்றுக்கிழமை கரைக்கப்பட்டன. அப்போது 9 போ் நீரில் மூழ்கினா். அவா்களில் 4 பேரின் உடல்கள் போலீஸாரால் கண்டறியப்பட்டன. நீரில் அடித்துச் செல்லப்பட்ட 12 பேரை தேடும் பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.