Coolie: ரஜினிகாந்த் நடிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படம் கூலி. இந்த படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்க அனிருத் இந்த படத்திற்கு இசையமைத்திருந்தார். கூலி திரைப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்திருந்தது. இது ஒரு பேன் இந்தியா திரைப்படமாக பிரம்மாண்டமாக வெளியானது. ரஜினியுடன் இந்த படத்தில் அமீர்கான் நாகார்ஜுனா உபேந்திரா சவுபின் சாகிர் சத்யராஜ் ஸ்ருதிஹாசன் போன்ற பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.
ஒவ்வொரு மாநிலங்களிலும் இருக்கும் சூப்பர் ஸ்டார்கள் இந்த படத்தில் மொத்தமாக இணைந்ததனால் ஒரு பெரிய எதிர்பார்ப்பு இந்த படத்தில் இருந்தது. ஆனால் வழக்கமான ரஜினி படம் போல இந்த கூலி திரைப்படம் விமர்சனத்தை பெற்றாலும் அனைவரும் எதிர்பார்த்தது ஆயிரம் கோடி வசூல் என்பதை தான். ஆனால் முதல் நாள் இந்த படம் உலக அளவில் 170 கோடி வரை வசூலித்து பெரும் சாதனை படைத்தது.
முதல் நாள் வசூலில் லியோ படத்தை முந்தி சினிமா வரலாற்றில் நம்பர் ஒன் இடத்தையும் பிடித்தது. அதைப்போல இரண்டாம் வாரத்திலும் வசூலில் முன்னேற்றம் கண்டது. இதனால் வசூல் மன்னனாக ரஜினிகாந்த் தன்னை இந்த படத்தின் மூலமும் நிரூபித்திருக்கிறார். வசூல் ரீதியாக இந்த படம் சிறப்பாக செயல்பட்டு வருவதால் ரஜினி ரசிகர்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். படம் வெளியாகி 20 நாட்களைக் கடந்தும் வெற்றிகரமாக ஓடி வருகின்றது. ஒரு பான் இந்தியா திரைப்படமாக தனது வசூல் சாதனையால் கோலிவுட் சினிமாவில் இந்த படம் ஒரு பெரிய சாதனையை நிகழ்த்தியுள்ளது.
ஆனால் மற்ற மாநிலங்களில் இந்த படம் ரிலீஸ் ஆனபோது அந்தந்த மாநிலங்களில் சூப்பர் ஸ்டார்களாக இருக்கும் நடிகர்களின் ரசிகர்களுக்கு இந்த படம் ஏமாற்றத்தை தந்தது என்று சொல்லலாம். ஏனெனில் கூலி திரைப்படத்தில் உபேந்திரா ஒரு முக்கியமான ரோலில் நடித்திருக்கிறார். அந்த படம் கன்னடத்தில் வெளியானபோது உபேந்திரா ரசிகர்களுக்கு பெரும் ஏமாற்றத்தை தான் தந்தது.
சமீபத்தில் நடந்த ஒரு விழாவில் உபேந்திராவிடம் உங்களுடைய ரசிகர்களுக்கு கூலி திரைப்படம் ஒரு பெரிய ஏமாற்றத்தை தந்தது. அதை பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? அந்த படத்தில் உங்களுக்கான ஸ்கிரீன் ஸ்பேஸ் மிகவும் குறைவாக இருந்ததே என்ற ஒரு கேள்வியை கேட்டனர். அதற்கு பதில் அளித்த உபேந்திரா அந்தப் படத்தில் தலைவருடன் நடித்தது ஒரு பெரிய பாக்கியமாக நான் கருதுகிறேன். அவர் அருகில் நின்றாலே எனக்கு போதும் என்று கூறி ஒரு ரஜினியின் ரசிகராக தன்னை நிரூபித்து இருக்கிறார் உபேந்திரா. ஆனால் இதுவே இங்குள்ள கோலிவுட் நடிகர்களுக்கு அப்படி ஒரு ஸ்கிரீன் பேஸ் மற்ற மொழி படங்களுக்கு கிடைத்தால் இவர்கள் ஒப்புக் கொள்வார்களா என்பது சந்தேகம்தான்.