அமரன் திரைப்படத்துக்கு பிறகு சிவகார்த்திகேயன் நடிப்பில் நீண்ட நாட்களாக எதிர்பார்த்துக் கொண்டிருந்த மதராஸி திரைப்படம் வெளியாகி இருக்கிறது. இந்த படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கியுள்ளார். அனிருத் இசை அமைத்துள்ளார். பெரும் எதிர்பார்ப்புகளுக்கு இடையே வெளியான இந்த திரைப்படம் எப்படி இருக்கிறது என்பதை புளூ சட்டை மாறன் தன்னுடைய பாணியில் விமர்சித்து உள்ளார். அதில்
படத்துடைய ஆரம்பத்தில் அமைதி பூங்காவாக இருந்த தமிழ்நாட்டில் ஆயுத கலாச்சாரத்தை கொண்டு வந்து இங்கே ஆயுத வியாபாரத்தை பெருக்க வேண்டும் என்று ஒரு குரூப்பு தமிழ்நாட்டில் ஆயுதங்களை கொண்டு வர முயற்சி செய்கிறார்கள். இதை கண்டுபிடித்த என் ஏ அதிகாரி ஒருவர் இதை எப்படியாவது தடுக்க வேண்டும் என்று முயற்சி செய்கிறார். ஆனால் அதையும் தாண்டி 5 லாரிகளில் ஆயுதங்கள் தமிழ்நாட்டிற்கு வந்துவிடுகிறது.
அதை பதுக்கி வைத்திருக்கும் இடமும் என் ஏ டீமுக்கு தெரிந்து விடுகிறது. இதை அளிக்க வேண்டும் என்றால் சூசைட் கமாண்டோ அட்டாக் செய்தால் தான் முடியும் என்று முடிவெடுக்கிறார்கள். இந்த சமயத்தில் படத்தின் ஹீரோ காதலில் தோல்வியுற்றதால் தற்கொலை தான் செய்வேன் என்று சுற்றிக் கொண்டிருக்கிறார். இதைப் பார்த்த என் ஏ அதிகாரி ஒரு ஐடியா பண்ணுகிறார். நம்ம டீமில் உள்ள தளபதியை பலி கொடுப்பதற்கு பதிலாக இந்த திடீர் தளபதியை நாம் பலி கொடுப்போம் என்று முடிவு எடுக்கிறார்.
அதன்பிறகு என்ன நடந்தது என்பதுதான் மீதி கதை. இந்த படத்தை கஜினியில் ஒரு பாதையும் துப்பாக்கியில் மீதி பாதியும் ரெண்டும் ஒன்றாக சேர்த்து மிக்ஸியில் அடித்து கொடுத்திருக்கிறார் முருகதாஸ். இந்த மாதிரி படங்களில் எது எப்படி இருந்தாலும் வில்லன் கேரக்டர் மிகவும் ஸ்ட்ராங்காக இருக்கணும். உதாரணத்துக்கு துப்பாக்கி படத்தில் இடைவேளை வரை ஹீரோ, வில்லனை சந்திக்க மாட்டார்.
படம் முடியும் வேலையில் தான் சந்திப்பார்கள். அதுவரைக்கும் இவங்க ரெண்டு பேரும் சந்திக்கிற காட்சி எப்படி இருக்கும் என்று ரசிகர்களிடம் ஒரு ஆர்வத்தை ஏற்படுத்திக் கொண்டிருக்கும். அந்த அளவுக்கு அந்த படத்தில் கேரக்டர்கள் ஸ்ட்ராங்காக இருக்கும். ஆனால் இந்த படத்தில் இடைவேளையில் படமே முடிஞ்சிடுச்சி. ஹீரோ எதனால தற்கொலை செய்யப் போறாரோ அதனாலயே இந்த படம் முடிந்தது. அந்த டைம்ல ஹீரோயினை அந்த என்ஏ அதிகாரிகள் ஒருவேளை சொல்லுவாங்க.
அதை மட்டும் ஒழுங்கா முடிச்சிருந்தா படம் முடிந்திருக்கும். ஆனா அங்கே படத்தை முடிக்காமல் இடைவேளைக்கு அப்புறம் கதையை தேவையில்லாம இழுனு இழுனு ஜவ்வா இழுத்து கதையே இல்லாம இஷ்டத்துக்கு இழுத்து வச்சதால் படம் ரொம்பவே சுமாரான படமா போச்சு. முதல் பாதி நன்றாக இருந்தாலும் ஹீரோவுக்கு ஒரு ஃபிளாஷ்பேக் சீன் இருக்கும் அதெல்லாம் சுத்தமா வேலைக்காகல.
ஒரு நல்ல விஷயம் என்னவென்றால் படத்தில் காமெடி பண்றேன், அது பண்றேன் இது பண்றேன் என்று சொல்லி யோகி பாபு மாதிரி ஒரு ஆள கொண்டு வந்து மேற்கொண்டு சாகடிக்கவில்லை. படத்துடைய ஆரம்பத்தில் துப்பாக்கி கலாச்சாரத்தை தமிழ்நாட்டில் கொண்டு வந்து எல்லாரையும் அழிக்க போறாங்க அப்படின்னு பயமுறுத்தி படத்தை ஆரம்பிக்கிறாங்க. அப்புறம் அவங்க கொண்டு வந்த துப்பாக்கிய வச்சி சுட்டா ஹீரோவை சுட்டாலும் சாக மாட்டேங்கிறாங்க,
வில்லனை சுட்டாலும் சாக மாட்டேங்கிறாங்க எல்லாம் அடுத்த சீன்லயே எந்திரிச்சு வந்துட்டாங்க. இதுக்கு எதுக்கு துப்பாக்கியை கொண்டு வந்து விக்க வராங்கன்னு தெரியல. பொம்மை துப்பாக்கி அப்படின்னு சொல்லி விக்க அனுமதி கொடுத்திருக்கலாம். இந்த படமும் எடுக்க தேவையில்லை. என்று வழக்கம்போல கலாய்த்து தள்ளிவிட்டார்.