தேசிய புலனாய்வு அமைப்பான என்ஐஏ (NIA) அதிகாரிகள், பயங்கரவாத சதி வழக்குடன் தொடர்புடையதாக கூறப்படும் இளைஞரை கைது செய்யும் நோக்கில் தூத்துக்குடி தாளமுத்து நகர் பகுதியில் இன்று (செப்.8) காலை திடீர் சோதனை நடத்தினர்.
சோதனைக்கு முந்தைய முன்னறிவிப்பு எதுவும் இல்லாததால், அப்பகுதி பொதுமக்கள் அதிர்ச்சியில் மூழ்கினர். இந்த சோதனையில், பீகார் மாநிலத்தைச் சேர்ந்த 22 வயது இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டதாகவும், அவர் ஒரு தீவிரவாத அமைப்புடன் தொடர்புடையவர் எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக, நாடு முழுவதும் 22 இடங்களில் ஒரே நேரத்தில் NIA சோதனைகள் நடைபெற்று வருகின்றன. இதில் தமிழகம், பீகார், மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்கள் அடங்கும். குறித்த இளைஞரிடம் பிடிபட்ட ஆவணங்கள், மொபைல் போன், எலெக்ட்ரானிக் சாதனங்கள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும், அவரிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்தச் சோதனைகள், தேசிய பாதுகாப்பை கவனத்தில் கொண்டு முன்னெடுக்கப்பட்ட முக்கிய நடவடிக்கை என குறிப்பிடப்படுகிறது.