சமூக வலைதளங்களில் பிரபலமாவதற்காக பலர் வித்தியாசமான காணொளிகளைப் பதிவிடுகின்றனர். அதில் ஒரு வகையாக, பிராங்க் காணொளிகள் மிகவும் பரவலாக உள்ளன. ஆனால், சில பிராங்க் காணொளிகள் மகிழ்ச்சியைத் தருவதற்கு பதிலாக, பாதிக்கப்பட்டவர்களுக்கு மன வேதனையை ஏற்படுத்துகின்றன. இன்ஸ்டாகிராமில் வைரலாகியுள்ள ஒரு காணொளியில், ஒரு நபர் சிறுமி ஒருவரின் தலையில் முடி அகற்றும் கிரீமைத் தடவி, அதிக லைக்ஸ் மற்றும் பார்வைகளைப் பெற முயற்சிக்கிறார். இதனால், சிறுமியின் தலைமுடி உதிரத் தொடங்குகிறது, இது சிறுமிக்கு பெரும் அதிர்ச்சியையும் வேதனையையும் ஏற்படுத்துகிறது.
View this post on InstagramA post shared by Evan Hart | ProfitMan (@profitman_ai)
இந்தக் காணொளியில், சிறுமி மன உளைச்சலில் அழுது தவிப்பதைப் பார்க்க முடிகிறது. பிராங்க் செய்தவர்கள் இதை வேடிக்கையாக நினைத்தாலும், இந்தச் செயல் சிறுமிக்கு ஏற்படுத்திய துன்பத்தை காணொளியைப் பார்க்கும் நம்மால் புரிந்துகொள்ள முடிகிறது. இணையவாசிகள் இந்தக் காணொளிக்கு கடும் கண்டனம் தெரிவித்து, இத்தகைய ஆபத்தான மற்றும் உணர்வுகளைப் புண்படுத்தும் பிராங்க்குகளைத் தவிர்க்க வேண்டும் என்று வலியுறுத்துகின்றனர்.