தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், தனது அரசியல் பயணத்தை மாற்றி அமைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
திருச்சியில் செப்டம்பர் 13 அன்று தனது பிரசாரத்தை தொடங்கிய விஜய், வரும் டிசம்பர் மாதம் வரை தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களுக்கும் சுற்றுப்பயணம் மேற்கொள்ள திட்டமிட்டிருந்தார்.
முன்னதாக, ஒரு நாளில் மூன்று மாவட்டங்களுக்கு செல்ல விஜய் திட்டமிட்டிருந்தார். ஆனால், திருச்சியில் அவர் சுற்றுப்பயணம் மேற்கொண்டபோது எதிர்பாராத வகையில் மக்கள் கூட்டம் திரண்டதால், திட்டமிட்டபடி பிரசாரத்தை மேற்கொள்ள முடியவில்லை. இந்த பெரும் கூட்டத்தைக் கருத்தில் கொண்டு, அவரது சுற்றுப்பயணத் திட்டத்தில் மாற்றம் செய்யப்படவுள்ளது.
இந்த மாற்றத்தின்படி, ஒரு நாளில் இரண்டு மாவட்டங்களுக்கு மட்டுமே அவர் செல்ல வாய்ப்புள்ளது. அவரது தேர்தல் பிரசாரத்திற்கான புதிய அட்டவணை விரைவில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Edited by Mahendran