#BREAKING : 165 பயணிகளுடன் சென்ற விமானத்தில் கோளாறு..!
Top Tamil News September 18, 2025 05:48 AM

சென்னையில் இருந்து 165 பயணிகளுடன் பெங்களூருக்கு புறப்பட்ட விமானத்தில் இயந்திர கோளாறு நடுவானில் திடீரென இயந்திர கோளாறு ஏற்பட அவசர அவசரமாக மீண்டும் சென்னையில் தரையிறங்கிய விமானம்.

சென்னையில் இருந்து பெங்களூரு புறப்பட்ட இண்டிகோ விமானத்தில் இன்று (செப்.17) நடுவானில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் பயணிகள் பீதியடைந்தனர். உடனடியாக விமானி, விமானத்தை சென்னை விமான நிலையத்தில் பத்திரமாக தரையிறக்கினார். விமானியின் இந்த சாமர்த்தியத்தால் அதில் பயணித்த 165 பயணிகளும் எந்த அசம்பாவிதமும் இன்றி பத்திரமாக மீட்கப்பட்டனர்.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.