மத்திய பிரதேசம் மாநிலத்தில் கள்ளக்காதலனின் பிறந்தநாள் பார்ட்டியில் கலந்து கொண்டு நடனமாடிய மனைவி சுட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியிருக்கிறது. இந்தக் கொடூர சம்பவத்தை செய்த கணவனை கைது செய்துள்ள காவல் துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
மத்திய பிரதேச மாநிலத்தைச் சேர்ந்தவர் அரவிந்த். இவர் 2023ம் வருடம் நந்தினி என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார். நந்தினியை திருமணம் செய்து கொள்வதற்கு முன்பே அரவிந்துக்கு திருமணமாகி குழந்தை ஒன்றும் இருக்கிறது. இந்த உண்மையை அறிந்த நந்தினி இது தொடர்பாக காவல்துறையிடம் புகாரளித்தார். அவரது புகாரின் அடிப்படையில் அரவிந்தை காவல்துறையினர் கைது செய்தனர். எனினும் ஜாமினில் அரவிந்த் வெளியே வந்தார்.
இந்நிலையில் நந்தினிக்கு அங்குஷ் என்ற வாலிபருடன் கள்ளத்தொடர்பு ஏற்பட்டுள்ளது. மேலும் அங்குஷின் பிறந்தநாள் பார்ட்டியில் கலந்து கொண்ட நந்தினி அவருடன் சேர்ந்து நடனமாடியிருக்கிறார். இது தொடர்பான வீடியோவை பார்த்த அரவிந்த் ஆத்திரமடைந்துள்ளார். மேலும் இது தொடர்பாக அவர் தனது மனைவி நந்தினியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். அவர்களுக்கிடையேயான வாக்குவாதம் முற்றிய நிலையில் அரவிந்த் தனது மனைவியை துப்பாக்கியால் சுட்டு படுகொலை செய்தார்.
இந்த கொடூர சம்பவம் குறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று நந்தினியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர். மேலும் இந்த கொலையில் ஈடுபட்ட அரவிந்தை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பதட்டத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியிருக்கிறது.
இதையும் படிங்க: அண்ணியுடன் முறை தவறிய காதல்... இளைஞர் படுகொலை.!! அண்ணன் கைது.!!