Rajini-Kamal: புது டிவிஸ்ட்டா இருக்கு? ரஜினி கமல் இணையும் படத்தை இயக்க போவது இவரா?
CineReporters Tamil September 18, 2025 09:48 PM
Rajini – Kamal: தமிழ் திரையுலகில் இரு முக்கியமான பில்லர்களாக பல ஆண்டுகளாக சேவை செய்து வருபவர்கள் நடிகர் ரஜினி மற்றும் கமல். தமிழ் திரையுலகில் மட்டுமில்லாமல் உலக அளவில் பிரபலமான நடிகர்களாகவும் அறியப்படுகிறார்கள். மக்கள் மத்தியில் சூப்பர் ஸ்டார் என்று ரஜினியும் உலக நாயகன் என்றும் கமலும் அழைக்கப்படுகிறார்கள். இருவருமே தனித்துவமான அடையாளங்களாக திகழ்கிறார்கள். ரஜினி அறிமுகம்:

ரஜினிகாந்தை பொறுத்தவரைக்கும் 1975 ஆம் ஆண்டு அபூர்வ ராகங்கள் என்ற படத்தின் மூலம் அறிமுகமானார். கே.பாலச்சந்தர்தான் இவரை சினிமாவில் அறிமுகப்படுத்தியவர். அதிலிருந்து வில்லன் கதாபாத்திரம், இரண்டாவது நாயகன், நடிகர், ஹீரோ என இன்று சூப்பர் ஸ்டாராக உயர்ந்து நிற்கிறார். எல்லாருக்குமே ஒரு கட்டத்தில் டர்னிங் பாயிண்ட் என்ற ஒன்று இருக்கும்..

அந்த வகையில் ரஜினிக்கு முக்கிய திருப்பு முனையாக அமைந்த படம் பாட்ஷா. 1995 ஆம் ஆண்டு வெளியான இந்தப் படம் அவருடைய வாழ்க்கையையே திருப்பி போட்டது என்று சொல்லலாம். 80கள் வரை அந்த கால கட்ட ரசிகர்கள் மட்டும் ரசித்து வந்த ரஜினியை இன்றைய 2 கே கிட்ஸ்களும் ரசிக்க காரணமாக அமைந்த படமாக இருந்தது பாட்ஷா படம்தான். அதன் மூலம் தான் ரஜினி தன்னுடைய மார்க்கெட்டை வேறொரு தளத்திற்கு கொண்டு சென்றார்.

கமல் அறிமுகம்:

அதே போல் தமிழ் திரையுலகில் ஒரு பல்துறை கலைஞராக இருப்பவர் நடிகர் கமல். நடிகர் மட்டுமின்றி இயக்குனர் , தயாரிப்பாளர், பாடகர், பாடலாசிரியர் என பல அடையாளங்களை தன்னுள் கொண்டிருப்பவர். களத்தூர் கண்ணம்மா படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி கிட்டத்தட்ட 60 ஆண்டுகளுக்கும் மேல் இந்த திரையுலகில் கால் பதித்து வருகிறார்.

ரஜினிக்கு எப்படி பாட்ஷா திரைப்படம் ஒரு டர்னிங் பாயிண்டாக அமைந்ததோ அதை போல் கமலுக்கும் திருப்பு முனையாக அமைந்த படம் நாயகன். உலக அளவில் பல விருதுகளை குவித்திருக்கிறார் கமல். பல பாராட்டுக்களையும் பெற்றிருக்கிறார். ஃபிலிம் ஃபேர் விருதை 19 முறை வென்ற ஒரு உன்னதமான கலைஞன் கமல்.

மோதலும் நட்பும்:
  • ஆரம்பத்தில் இருவருக்கும் இடையே கடுமையான போட்டி இருந்தது.
  • தொழில் முனையில் போட்டி இருந்தாலும் உள்ளுக்குள் இருவரும் நண்பர்களாகவே இருந்து வந்துள்ளனர்.
  • அவர்களுடைய நட்பு இன்றைய தலைமுறை நடிகர்களுக்கு ஒரு பாடமாகவே இருக்கிறது.
  • இவர்களுடைய மோதல்கள் , உறவுகள் திரையுலகில் பல மாற்றங்களை ஏற்படுத்தியிருக்கின்றன.

காலம் கடந்தும் இன்று வரை இவர்கள் இருவரும் தங்களுடைய முத்திரையை பதித்து வருகின்றனர். இவர்கள் இருவரும் இணைந்து 10க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளனர். ராகவேந்திரா, மூன்று முடிச்சு, தில்லு முல்லு, தீ, நெருப்பு டா என பல படங்களை குறிப்பிடலாம். ஆனால் இவர்கள் இணைந்து நடித்த படங்களில் இருவருக்குமே முக்கியத்துவம் வாய்ந்த கதாபாத்திரங்களாகத்தான் கொடுக்கப்பட்டிருக்கின்றன.

பிரிவுக்கான காரணங்கள்:

1980 க்கு பிறகு இருவருமே தனித்தனி பாதையை தேர்ந்தெடுக்க ஆரம்பித்தனர். ரஜினி மாஸ், ஸ்டைல் ஹீரோயிசம் அடிப்படையிலான கதைகளை தேர்ந்தெடுத்து நடிக்க ஆரம்பித்தார். கமல் ஆர்ட், எக்ஸ்பெரிமெண்டல் அடிப்படையிலான கதைகளை தேர்ந்தெடுத்து நடிக்க ஆரம்பித்தார்.

  • தனித்தனியாக பெரும் ரசிகர் கூட்டம் இருந்தாலும் சேர்ந்து நடிக்கும் போது யாருக்கு முக்கியத்துவம் இருக்கிறது என்பதை பார்ப்பதில் பெரும் சிக்கல் ஏற்படும்
  • அதுமட்டுமில்லாமல் தயாரிப்பு தரப்புக்கும் பெரும் சிக்கலாக அது அமையும்.
மீண்டும் இணையும் ரஜினி கமல்:

இந்த நிலையில் சமீபகாலமாக ரஜினி கமல் இணைவது உறுதி என்பதை போல தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. ஏன் கமலே அதை உறுதிபடுத்தியிருக்கிறார். தற்போது ரஜினியும் அதை பற்றி சொல்லியிருக்கிறார். இருவரும் இணையும் படத்தை லோகேஷ்தான் இயக்குவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

pradeep renganathan

ஆனால் இவர்கள் இணையும் படத்தை பிரதீப் ரெங்கநாதன் இயக்க அதிக வாய்ப்பிருப்பதாக சொல்லப்படுகிறது. தற்போது பிரதீப் எல்.ஐ. கே மற்றும் டியூடு போன்ற படங்களில் நடித்து முடித்துள்ளார். அதன் பிறகு எந்தவொரு கமிட்மெண்ட்டுலயும் அவர் இல்லை. அதனால் ரஜினி கமல் படத்தை இவர் இயக்க வாய்ப்பிருப்பதாக சொல்லப்படுகிறது.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.