இந்தியா எங்கள் மீது தாக்குதல் நடத்தினால் சவுதி அரேபியா எங்களுக்கு உதவும்: பாகிஸ்தான் அமைச்சர்.
WEBDUNIA TAMIL September 21, 2025 01:48 PM

பஹல்காம் தாக்குதல் மற்றும் 'ஆபரேஷன் சிந்தூர்' மோதலுக்கு பிறகு இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றம் அதிகரித்துள்ள நிலையில், பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் கவாஜா ஆசிஃப், இந்தியாவுடன் போர் ஏற்பட்டால் சவுதி அரேபியா தங்களுக்கு உதவும் என்று அறிவித்துள்ளார்.

பாகிஸ்தான் மற்றும் சவுதி அரேபியா இடையே அண்மையில் கையெழுத்தான ஒப்பந்தப்படி, ஒரு நாட்டின் மீதான தாக்குதல் மற்றொரு நாட்டின் மீதான தாக்குதலாக கருதப்படும் என்றும், இந்த ஒப்பந்தம் நேட்டோ அமைப்பின் கூட்டுப் பாதுகாப்புப் பிரிவு 5-ஐ ஒத்திருப்பதாக அமைச்சர் கவாஜா தெரிவித்துள்ளார்.

இந்தியா பாகிஸ்தான் மீது தாக்குதல் நடத்தினால், சவுதி அரேபியா தங்களுக்கு ஆதரவாக வரும் என்றும், இது இந்தியாவிற்கு பெரும் சவாலாக அமையும் என்றும் பாகிஸ்தான் எதிர்பார்க்கிறது.

இந்த அறிவிப்பு தென் ஆசியப் பிராந்தியத்தில் பதற்றத்தை மேலும் அதிகரித்துள்ளது.

Edited by Mahendran

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.