தமிழக அரசின் கலைஞர் மகளிர் உரிமைத்திட்ட மூலம் பெண்களுக்கு மாதம் தரும் ரூபாய் 1000 உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. இந்தத் திட்டத்தில் புதியதாக உரிமை தொகை பெற விண்ணப்பித்தவர்களின் வங்கிக் கணக்கு சோதனை முயற்சி நடைபெற்று வருகிறது.
அதாவது இந்த திட்டத்தின் கீழ் விண்ணப்பித்த பயணர்களின் வங்கிக் கணக்கிற்கு ரூ. 1 அனுப்பி அந்தப் பணம் குறிப்பிட்ட பயனாளர்களின் வங்கிக் கணக்கிற்கு செல்கிறதா? என்பதை சரி பார்க்க அரசு தரப்பில் சோதனை நடைபெற்று வருகிறது என கூறப்படுகிறது.
அதனால் திடீரென ஒரு நபரின் வங்கி கணக்கில் ரூ.1 வரவு வைக்கப்பட்டிருந்தால் அது மகளிர் உரிமைத்தொகை சரி பார்ப்பு காண நடவடிக்கையாக இருக்கலாம்.