கே.பி.சுந்தராம்பாள் அவர்கள் நினைவு தினம்!.
Seithipunal Tamil September 21, 2025 01:48 PM

தமிழிசை, நாடகம், திரைப்படம், ஆன்மிகம் என பல துறைகளிலும் புகழ்பெற்று விளங்கியதிருமதி.கே.பி.சுந்தராம்பாள் அவர்கள் நினைவு தினம்!.

 கே. பி. சுந்தராம்பாள் என அறியப்படும் கொடுமுடி பாலாம்பாள் சுந்தராம்பாள் (அக்டோபர் 11, 1908 - செப்டம்பர் 19, 1980) தமிழிசை, நாடகம், அரசியல், திரைப்படம், ஆன்மிகம் எனப் பலதுறைகளிலும் புகழ் ஈட்டியவர். இவர் கொடுமுடி கோகிலம் என்றும் அழைக்கப்பட்டார்.

 கே. பி. சுந்தராம்பாள் ஈரோடு மாவட்டத்திலுள்ள கொடுமுடியில் பாலாம்பாள் என்ற அம்மையாருக்கு சுந்தராம்பாள் பிறந்தார். இவருக்கு கனகசபாபதி, சுப்பம்மாள் என்ற இரண்டு சகோதரர்கள். இளம்வயதிலேயே தந்தையை இழந்தார். தனது சகோதரர்களின் ஆதரவால், குடும்பத்தை நடத்தி வந்தார் தாயார். 'கொடுமுடி லண்டன் மிஷன் பள்ளி'யில் கல்வி கற்றார் சுந்தராம்பாள்.

 காங்கிரஸ் பிரச்சாரங்களில் சுந்தராம்பாள் தவறாது ஈடுபட்டு வந்தார். கதர் இயக்கம், தீண்டாமை ஒழிப்பு, வெள்ளை ஏகாதிபத்திய எதிர்ப்பு ஆகிய பாடல்களையும் பாடி வந்தார். காமராசர் ஆட்சியின் போது 1958 ஆம் ஆண்டில் தமிழ்நாடு சட்டமன்ற மேலவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.


 இலக்கியத்துக்கான நோபல் பரிசு பெற்ற திரு.வில்லியம் கோல்டிங் அவர்கள் பிறந்ததினம்!.

இலக்கியத்துக்கான நோபல் பரிசு பெற்ற பிரிட்டிஷ் நாவல் ஆசிரியரும், கவிஞருமான சர் வில்லியம் ஜெரால்டு கோல்டிங் 1911ஆம் ஆண்டு செப்டம்பர் 19 ஆம் தேதி இங்கிலாந்தின் கார்ன்வால் பகுதியில் உள்ள நியூகி நகரில் பிறந்தார்.

 இவர் பல கதை, கட்டுரைகளை எழுதினார். இவரது படைப்புகள் பல முறை நிராகரிக்கப்பட்டாலும், மனம் தளராமல் தொடர்ந்து எழுதினார்.

 இவர் லார்டு ஆஃப் தி ப்ளைஸ் என்ற நாவலை 1954-ல் எழுதினார். நன்மை, தீமை இரண்டுக்கும் இடையேயான மனிதனின் உள்முகப் போராட்டங்கள் குறித்த இந்த நாவல் உலகம் முழுவதும் பிரபலமடைந்து, மாபெரும் வெற்றி பெற்றது.

 ரைட்ஸ் ஆஃப் பேஸேஜ் நாவலுக்காக 1980-ல் புக்கர் பரிசு பெற்றார். பல விருதுகள், கௌரவங்களைப் பெற்ற இவரது நூல்கள் பல மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டன. 73 வயதில் இலக்கியத்துக்கான நோபல் பரிசு பெற்றார். 1988-ல் சர் பட்டம் வழங்கப்பட்டது.

சிறுகதை, நாடகம், கட்டுரை, விமர்சனம் என பலவிதமான வெற்றிப் படைப்புகளைத் தந்த வில்லியம் கோல்டிங் தனது 82-வது வயதில் 1993 ஜூன் 19 ஆம் தேதி அன்று மறைந்தார்.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.