தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி, ஒரு நாள் பயணமாகத் டெல்லிக்கு சென்றுள்ளார். அங்கு, நாட்டின் புதிய துணை குடியரசு தலைவராகப் பதவியேற்றுள்ள சி.பி. ராதாகிருஷ்ணனை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவிக்கிறார்.
தமிழகத்தைச் சேர்ந்தவரான சி.பி. ராதாகிருஷ்ணன், கடந்த செப்டம்பர் 12-ஆம் தேதி நாட்டின் 15-வது துணை குடியரசுத் தலைவராகப் பதவியேற்றார்.அவரை நேரில் சந்தித்து பேசுவதற்காகவே ஆளுநர் ரவி டெல்லிக்கு சென்றுள்ளார்.
மேலும் சிபி ராதாகிருஷ்ணனை சந்தித்த பின்னர், ஆளுநர் ஆர்.என். ரவி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் பிரதமர் நரேந்திர மோடி ஆகியோரையும் சந்தித்து பேச வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஆளுநரின் இந்த திடீர் தில்லி பயணம், அரசியல் வட்டாரங்களில் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. ஏற்கனவே தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரனும் டெல்லிக்கு சென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Edited by Mahendran