சமீபத்தில் kpy பாலா மீதான புகார்கள் சமூக வலைதளங்களில் காட்டுத் தீ போல் பரவி வருகிறது. எந்த சமூக வலைதள பக்கங்களை பார்த்தாலும் kpy பாலா தான் பேசும் பொருளாக இருக்கிறார். இந்நிலையில் பிரபல யூட்யூபர் லண்டன் தமிழன் கேபிஒய் பாலாவிற்கும் லண்டனிற்கும் என்ன சம்பந்தம் என்று தன்னுடைய வலைதள பக்கத்தில் கூறி இருக்கிறார்.
வெளிநாட்டு பணம் எப்படி? :அதில், ஒருமுறை லண்டனுக்கு கேபிஒய் பாலாவும் அமுதவாணனும் ஒரு event-காக வந்திருந்தார்கள். அதற்காக அவர்களுக்கு பெரிய amount கொடுக்கப்பட்டது. இங்கு வந்து ஒரு நிகழ்ச்சி நடத்தப்பட்டதற்காக நேர்மையான முறையில் அவருக்கு அந்த பெரிய தொகை வழங்கப்பட்டது.
இந்த பணத்தில் தான் பாலா பல பேருக்கு உதவி செய்து வருகிறார். இப்படி பல உதவிகள் அவர் கடினமா உழைத்து தான் செய்து வருகிறாரே தவிர மற்றபடி யாருடைய பணமோ? அல்லது வெளிநாடுகளில் இருந்து வரும் கருப்பு பணத்தையோ illegal-லாக அவர் பயன்படுத்தவில்லை. இதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
அப்படி அவர் பயன்படுத்தும் பணங்கள் அனைத்தும் தப்பான வழியில் வந்ததுதான் என்று ஆதாரத்தோடு யாராவது நிரூபிக்க முன்வந்தால் அதைப்பற்றி நாம் அப்புறம் பேசுவோம். உண்மை தெரிந்தால் மட்டுமே மற்றவர்களைப் பற்றி பேச வேண்டும். தெரியவில்லை என்றால் தயவு செய்து பேசாதீர்கள்.
மீடியா ஆபத்து :இன்று மீடியாக்கள் ஒருத்தரை உச்சத்தில் தூக்கி வைத்து கொண்டாடுவதும் காலப்போக்கில் அவரை கீழே போட்டு மிதிப்பது அவர்களுக்கு வழக்கமாக மாறிவிட்டது. இதே போல தான் watermelon star-ஐ உருவாக்கி விட்டீர்கள். தற்போது அவர் நிலை என்ன என்பது எல்லாருக்கும் தெரியும். மக்கள் இதை உணர வேண்டும்.
ஆதாரம் இருக்கா? :ஒருவர் மற்றவர்களுக்கு உதவுவார் என்றால் அவரை தூக்கி வைத்து கொண்டாடாமல் கூட இருக்கலாம். ஆனால் அவரை கீழே போட்டு மிதிப்பது என்பது தவறான விஷயம். இப்படி பல பேரை அழித்து விட்டோம். திருப்பி யாரையும் இந்த மாதிரி அழித்துவிட வேண்டாம். பாலா தப்பான ஆள் என்று யாராவது ஆதாரத்துடன் நிரூபித்தால் அப்பொழுது அதைப் பற்றி பேசலாம்.
மக்களிடம் விழிப்புணர்வு வேண்டும் :ஆதாரமில்லாமல் யார் யாரோ சொல்கிற பேச்சை எல்லாம் கேட்டுவிட்டு இருக்கிறவரை நசுக்கக் கூடாது. இதுவே நம் கண் முன் ஊழல் செய்து விட்டு ஜாலியாக சுற்றிக் கொண்டு இருப்பவர்களை நாம் எதுவும் பேச மாட்டோம். ஏனென்றால் அவர்களிடம் பவர் இருக்கு.
அதனால் நாம் வாயை மூடிக்கொண்டு பேசாமல் இருப்போம். அந்த மாதிரி ஆளை விட்டுட்டு பாலா மாதிரி அப்பாவியை குனிய குனிய அடிப்பது எல்லாம் தப்பான விஷயம் தான். மக்கள் நெகட்டிவிட்டியை நம்பவும் கூடாது அதற்கு ஆதரவும் தர கூடாது. அப்படி இருந்தால் மட்டும் தான் யூட்யூபில் நல்ல மாதிரியான கன்டென்ட் வரும். அப்போதுதான் நேர்மையான விஷயங்கள் மக்களை சென்றடையும். என்று கூறியுள்ளார்.