கொலம்பியாவில் தங்க சுரங்கம் இடிந்து விழுந்து விபத்து நேரிட்டதில், சுரங்கத்தில் சிக்கித் தவிக்கும் 20 தொழிலாளர்களின் கதி என்ன? என்று பதைபதைப்பு ஏற்பட்டுள்ளது. இடிபாடுகளில் சிக்கிய தொழிலாளர்களை மீட்கும் முயற்சியில் மீட்பு படையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்
தென்னமெரிக்க நாடுகளில் ஒன்றான கொலம்பியாவில் தங்கச் சுரங்கங்கள் அதிகம் உள்ளன. இங்குள்ள சுரங்கங்களில் ஆபத்தான முறையில் தங்கத்தை வெட்டி எடுக்கும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகிறார்கள். இங்கு கடந்த ஆண்டு மட்டும் 6.6 டன் தங்கம் உற்பத்தி செய்யப்பட்டது.
அதே நேரத்தில், சட்டவிரோதமாக இயங்கி வரும் சில தங்கச் சுரங்கங்களில் விபத்துகளும் நிகழ்கின்றன. அந்த வகையில், வடக்கு கொலம்பியாவில் உள்ள ஒரு தங்கச் சுரங்கம் இடிந்து விழுந்து விபத்து ஏற்பட்டது. இடிபாடுகளில் 20-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் சிக்கிக் கொண்டனர். மீட்புப் படையினர், இடிபாடுகளில் சிக்கிய தொழிலாளர்களை மீட்கும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இடிபாடுகளுக்குள் சிக்கிய தொழிலாளர்களின் நிலை என்ன என்பது தெரியவில்லை.
சமீபத்தில் கொலம்பியாவில் ஒரு சட்டவிரோதச் சுரங்கத்தில் ஏழு சுரங்கத் தொழிலாளர்களின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டன. 9 நாட்கள் போராடி உயிரிழந்த தொழிலாளர்களின் உடலை மீட்புக் குழு மீட்டெடுத்தது. இந்தச் சம்பவம் நடந்த சில வாரங்களில் மீண்டும் தங்கச் சுரங்கம் இடிந்து தொழிலாளர்கள் சிக்கியிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!
உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?