வெள்ள அபாய அளவை எட்டியது பேச்சிப்பாறை அணை... கரையோர மக்களுக்கு எச்சரிக்கை!
கன்னியாகுமரி மாவட்டம், பேச்சிப்பாறை அணையிலிருந்து உபரிநீர் வெளியேற்றப்படுவதால் கரையோர பகுதி மக்கள் பொதுமக்கள் பாதுகாப்புடன் இருக்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

குமரி மாவட்டம், பேச்சிப்பாறை அணை வெள்ள அபாய அளவான 42.00 அடியை 24.10.2025 இன்று எட்டியுள்ளது. அணை நீர்மட்டம் அதிக மழையினால் 46.00 அடியினை அடையும் பட்சத்தில் அதற்கு மேல் வரும் உபரிநீர் பேச்சிப்பாறை அணையிலிருந்து கோதையாற்றில் திறந்துவிடபட்டு களியல், திற்பரப்பு, மூவாற்றுமுகம், குழித்துறை, இரையுமன்துறை வழியாக தேங்காப்பட்டணத்தில் கடலில் சென்று சேரும்.

எனவே கரையோரமாக வசிக்கும் கோதையாறு தாமிரபரணி ஆற்றின் (குழித்துறை ஆறு) பொதுமக்கள் பாதுகாப்புடன் இருக்குமாறு மாவட்ட ஆட்சியர் ஆர்.அழகுமீனா தெரிவித்துள்ளார். இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா? லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம் பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!! உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?