2026 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, தமிழக அரசியல் களம் தீவிர கூட்டணி பேச்சுவார்த்தைகளால் சூடுபிடித்து வருகிறது. முக்கிய கட்சிகள் அனைத்தும் தங்கள் நிலைப்பாட்டை உறுதிப்படுத்த முயற்சித்து வரும் நிலையில், நடிகர் விஜயின் அரசியல் முடிவுகள் மேலும் பரபரப்பை உருவாக்கியுள்ளன.
2026 தேர்தலை நோக்கி கூட்டணி முயற்சிகள் தீவிரம்திமுக, அதிமுக உள்ளிட்ட முக்கிய கட்சிகள் தேர்தல் தயாரிப்பில் முழுமையாக ஈடுபட்டுள்ளன. இதேவேளை, கரூர் சம்பவத்திற்கு பிறகு விஜயை தங்கள் கட்சியில் இணைக்கும் முயற்சியில் பாஜக மற்றும் அதிமுக உள்ளிட்ட கட்சிகள் செயல்பட்டு வருவதாக தகவல்கள் வெளியானது. இதை உறுதிப்படுத்தும் வகையில், முன்னாள் முதல்வர் இபிஎஸ் சமீபத்தில் ‘கூட்டணிக்கு பிள்ளையார் சுழி போடப்பட்டுவிட்டது’ என கூறியிருந்தார். ஆனால், விஜய் தரப்பிலிருந்து இதுவரை எந்த அதிகாரப்பூர்வ விளக்கமும் வரவில்லை.
இதையும் படிங்க: இத யாரும் எதிர்பார்க்கல.... விஜய்க்கு அடித்த ஜாக்பட்! தவெகவில் இணைந்த முக்கிய பிரபலம்! செம குஷியில் விஜய்...
இபிஎஸ் வழங்கிய தெளிவான விளக்கம்
இந்நிலையில், அதிமுக தலைவரான எடப்பாடி பழனிசாமி சமீபத்தில் வெளியிட்ட அறிக்கையில், “தமிழக வெற்றிக்கழகம் கட்சியுடன் அதிமுக இதுவரை எந்த கூட்டணி பேச்சுவார்த்தையும் நடத்தவில்லை; அதேபோல அவர்கள் எங்களுடனும் எந்த பேச்சு நடத்தவில்லை” என்று தெரிவித்தார். இதன் மூலம் தற்போது பரவி வரும் செய்திகளை மறுத்து விட்டார்.
அரசியல் வட்டாரங்களில் கிளர்ச்சிகரூர் துயர சம்பவத்திற்குப் பிறகு, அதிமுக TVK உடன் கூட்டணி வைக்கலாம் என்ற தகவல் வெளிவந்தது. இதேபோல், அமித்ஷா, “கூட்டணியை விரிவுபடுத்த விரும்புகிறோம்” என கூறியிருந்தார். இதையடுத்து இபிஎஸ் வழங்கிய விளக்கம், கூட்டணியைச் சுற்றிய அரசியல் குழப்பத்தை மேலும் தீவிரப்படுத்தியுள்ளது.

வரும் 2026 தேர்தலை நோக்கி தமிழக அரசியல் சூழ்நிலை நாளுக்கு நாள் மாறி வருகிறது. இபிஎஸ் விளக்கம் வெளிவந்துள்ள நிலையில், விஜய் மற்றும் அவரது TVK கட்சி எந்த நிலைப்பாட்டை எடுத்துக்கொள்ளும் என்பது தான் தற்போது அரசியல் வட்டாரங்களில் பெரிய எதிர்பார்ப்பாக மாறியுள்ளது.
இதையும் படிங்க: அப்படிப்போடு... இபிஎஸ்-க்கு விஜய் ஆதரவு? புதிய திருப்பத்துடன் அனல் பறக்கும் அரசியல்....!