மும்பை வெடிகுண்டு தாக்குதலை தாவூத் இப்ராஹிம் மற்றும் அவரது கூட்டாளிகள் சேர்ந்து நடத்தியதாக நம்பப்படுகிறது. இதனால் தாவூத் இப்ராஹிம் தற்போது பாகிஸ்தானில் பதுங்கி இருப்பதாக கூறப்படுகிறது.
ஒரு காலத்தில் பாலிவுட் நடிகை மம்தா குல்கர்னி தாவூத் இப்ராஹிம்-ஐ காதலித்ததாக கூறப்பட்டது. வெளிநாட்டில் பதுங்கியிருந்த மம்தா, கடந்த ஆண்டு இந்தியாவிற்கு திரும்பினார். அவர் உத்தரபிரதேசத்தில் நடைபெற்ற கும்பமேளாவில் கலந்து கொள்ள வந்தார். அதன் பிறகு தன்னை பெண் துறவியாக மாற்றிக்கொண்டார். தற்போது “மாதா நந்த் கிரி” என்ற பெயரில் வாழ்ந்து வருகிறார்.
மம்தா குல்கர்னி,
மம்தா குல்கர்னி உத்தரபிரதேச மாநிலம் கோரக்பூரில் நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசும்போது, “தாவூத் இப்ராஹிம் உடன் எனக்கு எந்த விதமான தொடர்பும் இல்லை. தாவூத் இப்ராஹிம்-க்கு மும்பை குண்டு வெடிப்பில் எந்த தொடர்பும் இல்லை. அவர் தீவிரவாதி அல்ல” என்று தெரிவித்தார்.
நான் தாவூத் இப்ராகிமை சந்தித்ததும் கிடையாது. மீடியாக்களும், அரசியல்வாதிகளும்தான் தாவூத் இப்ராகிமை தவறாக சித்தரிக்கின்றன. எனது முன்னாள் பார்ட்னர் விக்கி கோஸ்வாமி எந்த வித தேசவிரோத செயலிலோ அல்லது தீவிரவாத செயலிலோ ஈடுபட்டது கிடையாது'' என்று குறிப்பிட்டு இருந்தார்.
இச்செய்தி சமூகவலைத்தளத்தில் வைரலாக பரவியது. நெட்டிசன்கள் பலரும் மம்தா குல்கர்னியை கடுமையாக விமர்சனம் செய்தனர்.
மம்தா குல்கர்னி, தாவூத் இப்ராகிம்
இதையடுத்து மம்தா குல்கர்னி இதற்கு விளக்கம் அளித்துள்ளார். அதில், விக்கி கோஸ்வாமி குறித்து தான் பேசியதாகவும், தாவூத் இப்ராகிம் குறித்து பேசவில்லை என்றும் அதில் குறிப்பிட்டுள்ளார்.
மம்தா குல்கர்னி ஒரு நேரத்தில் சோட்டாராஜனையும் காதலித்தார். சோட்டாராஜனால் தான் பாலிவுட்டில் பெரிய அளவில் சாதிக்க முடிந்தது என்றும் கூறப்பட்டது.
அதன் பிறகு விக்கி கோஸ்வாமியை திருமணம் செய்து கொண்டார். ஆனால் போதைப்பொருள் கடத்தல் வழக்கில் விக்கி கோஸ்வாமி கைது செய்யப்பட்டார்.
இதற்கு தாவூத் இப்ராகிம்தான் காரணம் என்றும் கூறப்பட்டது. விக்கி கோஸ்வாமி கைது செய்யப்பட்டதால் மேற்கொண்டு என்ன செய்வதேன்று தெரியாமல் மும்பைக்கு திரும்பிவிட்டார்.
`போதைப்பொருள் வழக்கு டு தலைமறைவு டு சந்நியாசி..!’ - கும்பமேளாவில் நடிகை மம்தா குல்கர்னி