இந்திய சினிமாவில் பண்டிகை காலங்களில் படங்கள் வெளியாவது தொடர்ந்து வலக்கமாக உள்ளது. அதன்படி தமிழ் சினிமா மட்டும் இன்றி பான் இந்திய மொழிகளான தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி மொழிகளில் தொடர்ந்து பண்டிகைக் காலத்தில் படங்கள் வெளியாகி வருகின்றது. இந்த நிலையில் தொடர்ந்து தமிழில் பொங்கல் மற்றும் தீபாவளி பண்டிகை காலத்தில் முன்னணி நட்சத்திரங்களின் படங்கள் வெளியாகி பண்டிகையின் மகிழ்ச்சியை ரசிகர்களுக்கு தொடர்ந்து இரட்டிப்பாக்கி வருகின்றது. அதன்படி கடந்த 2024-ம் ஆண்டு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு 31-ம் தேதி அக்டோபர் மாதம் திரையரங்குகளில் வெளியான இரண்டு படங்கள் ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்றது. தமிழ் சினிமாவில் வெளியான அமரன் மற்றும் தெலுங்கு சினிமாவில் லக்கி பாஸ்கர் ஆகிய படங்கள் வெளியாகி இருந்தது.
அதன்படி அமரன் படத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நாயகனாக நடித்து இருந்த நிலையில் லக்கி பாஸ்கர் படத்தில் நடிகர் துல்கர் சல்மான நடித்து இருந்தார். இவர்களின் நடிப்பில் கடந்த ஆண்டு தீபாவளி பண்டிகைக்கு வெளியான இந்தப் படங்கள் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்றது. இதனைத் தொடர்ந்து நேற்று படக்குழு இந்தப் படங்களில் ஓர் ஆண்டை கொண்டாடியது குறிப்பிடத்தக்கது.
அமரன், லக்கி பாஸ்கர் படங்கள் குறித்து ஜிவி பிரகாஷ் வெளியிட்ட பதிவு:இந்த நிலையில் இந்த இரண்டு படங்களுக்குமே இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் குமார் தான் இசையமைத்து இருந்தார். அதன்படி தமிழில் வெளியான அமரன் மற்றும் தெலுங்கு சினிமாவில் வெளியான லக்கி பாஸ்கர் ஆகிய இரண்டு படங்களிலும் வெளியான பாடல்களும் ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் இந்த இரண்டு படங்களும் ஓர் ஆண்டுகளை நிறைவு செய்ததைத் தொடர்ந்து தனது எக்ஸ் தள பக்கத்தில் ஜிவி பிரகாஷ் குமார் ஒரு பதிவு ஒன்றை வெளியிட்டு இருந்தார். அதில் இரண்டு படங்களின் போஸ்டர்களுடன் என்ன ஒரு மறக்க முடியாத நாள் என்று பதிவிட்டுள்ளார். இந்தப் பதிவு ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது.
Also Read… தளபதி விஜயின் ஜன நாயகன் படத்தின் முதல் சிங்கிள் ரிலீஸ் எப்போது? வைரலாகும் தகவல்!
ஜிவி பிரகாஷ் குமார் வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:What a day to remember 😍 #amaran #LuckyBaskhar pic.twitter.com/B8bPLgVyjO
— G.V.Prakash Kumar (@gvprakash)
Also Read… ஜனவரி 2026-ல் வெளியாகும் கருப்பு படம்? வைரலாகும் தகவல்