
ஜன சூராஜ் கட்சியின் தலைவர் பிரசாந்த் கிஷோர், பீகார் சட்டப்பேரவை தேர்தலுக்கு முன்னோ அல்லது பின்னரோ எந்த கட்சியுடனும் கூட்டணி வைக்க போவதில்லை என்று உறுதியளித்துள்ளார். இதனை பாட்னாவில் நடந்த ஒரு மாநாட்டில் அவர் எழுத்துபூர்வமாகவும் வழங்கினார்.
தங்கள் கட்சி 10 இடங்களுக்கும் குறைவாகவோ அல்லது 150 இடங்களுக்கும் அதிகமாகவோ வெற்றி பெறக்கூடும் என்று அவர் கணித்துள்ளார்.
தேர்தலுக்குப்பிறகு ஜன சூராஜ் கிங்மேக்கராகும் நிலை வந்தால், அது குழப்பமான ஆணைக்கு வழிவகுக்கும்போது, எம்.எல்.ஏ.க்களை கட்டுப்படுத்துவது கடினம் என்று பிரசாந்த் கிஷோர் ஒப்புக்கொண்டார். இதற்கு அவர், 'பண ஆசை மற்றும் சிபிஐயின் பயத்தை காரணமாக குறிப்பிட்டார்.
பா.ஜ.க.வை மறைமுகமாக குற்றம் சாட்டிய அவர், "நாங்கள் எம்.எல்.ஏக்களை விற்போமா என்று ஏன் கேள்வி கேட்கிறீர்கள்; இந்த கேள்வியை ஏன் எம்.எல்.ஏக்களை வாங்குகிறீர்கள் என்று வாங்குபவர்களிடம் கேளுங்கள்" என்று ஆவேசமாக பதிலளித்தார்.
தான் ஏற்கனவே உள்ள கட்சிகளுக்கு வியூகம் வகுத்ததற்கு மாறாக, இப்போது தனது கொள்கைகளை செயல்படுத்த புதிய அமைப்பை உருவாக்கியுள்ளதாகவும் அவர் விளக்கினார்.
Edited by Mahendran