Biggboss Tamil: பிக் பாஸ் தமிழ் சீசன் 9 நிகழ்ச்சியில் இந்த வாரம் வெளியேற இருக்கும் பிரபலம் குறித்த தகவல் தற்போது வெளியாகி இருக்கிறது/
பிக் பாஸ் தமிழ் சீசன் 9 நிகழ்ச்சி விறுவிறுப்பாக நடந்து வருகிறது. ஆனால் மற்ற சீசன்களைப் போல இல்லாமல் இந்த சீசனில் போட்டியாளர்கள் சண்டை போடுவது தான் மக்களுக்கு ஆர்வமாக இருக்கும் என்ற வீதியில் தினம் ஒரு சண்டை என ஆட்டம் காட்டி வருகின்றனர்.
அந்த வகையில் இந்த வாரம் தொடங்கியதிலிருந்து வெள்ளிக்கிழமை எபிசோடு வரை போட்டியாளர்கள் மாற்றி மாற்றி சண்டை போட்டுக் கொண்டனர். அந்த சண்டையில் கூட யார் பக்கம் நியாயம் இருக்கும் என பேசும் அளவுக்கு கூட ஒருவரும் சரியானதற்கு குரல் கொடுக்கவில்லை.
நானும் கத்துகிறேன் என்ற பெயரில் மாற்றி மாற்றி கத்துவது பார்க்கும் ரசிகர்களுக்கு காது வலியையும் தலைவலியையும் தான் கொடுக்கிறது. இந்த வாரம் வாட்டர் மெலன் ஸ்டார் திவாகர் கடந்த இரண்டு வாரமாக அமைதி காத்து வந்தார்.
ஆனால் இந்த வாரம் அளவுக்கு அதிகமாகவே கன்டென்ட் கொடுப்பதாக நினைத்துக் கொண்டு அவர் செய்த விஷயங்கள் ரசிகர்களிடம் சலிப்பை ஏற்படுத்தியிருக்கிறது. மற்ற போட்டியாளர்களை தர குறைவாக பேசுவதும், சட்டை இல்லாமல் கேமரா முன்னால் நின்று நடிக்கிறேன் என்ற பெயரில் அவர் செய்யும் கூத்துக்களும் அபத்தமாகவே இருக்கிறது. 
தற்போது வார இறுதி வந்து விட்ட நிலையில் விஜய் சேதுபதி இது குறித்து கேள்வி எழுப்புவார் என ரசிகர்கள் எதிர்பார்த்து உள்ளனர். அது ஒரு புறம் இருக்க இந்த வார எலிமினேஷன் பட்டியலில், வினோத், கம்ருதீன், பார்வதி, கலை மற்றும் அரோரா உள்ளனர்.
இதில் கண்டிப்பாக பார்வதி மற்றும் கம்ருதீன் காப்பாற்றப்பட்டு விடுவார்கள். இதனால் அரோரா அல்லது கலை உள்ளிட்ட இருவரில் ஒருவர் வெளியேற வாய்ப்பு இருப்பதாக பலரும் எதிர்பார்த்து வந்த நிலையில் தற்போது கலையரசன் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறி இருக்கிறார்.
இவர் வெளியேற்றம் குறித்த எபிசோட் நாளை ஒளிபரப்பு செய்யப்படும். இந்த வாரம் வைல்ட் கார்டு எண்ட்ரியும் இருப்பதால் ரசிகர்கள் பெரிய எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர்.