T20 போட்டிகளில் அதிக ரன்கள் அடித்த வீரர்கள் பட்டியலில், இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் ரோஹித் ஷர்மாவின் சாதனையை பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாம் முறியடித்துள்ளார். ரோஹித் ஷர்மா 4,231 ரன்கள் எடுத்து இரண்டாவது இடத்தில் இருந்த நிலையில், பாபர் அசாம் தற்போது அவரை விஞ்சியுள்ளார். பாபர் அசாம் தற்போது T20-யில் 4,234 ரன்கள் அடித்து உலக சாதனையை நிலைநாட்டியுள்ளார்.
இந்தப் பட்டியலில், விராட் கோலி 4,188 ரன்களுடன் 3-வது இடத்தில் உள்ளார். மேலும், 2024 T20 உலகக் கோப்பையுடன் ரோஹித் மற்றும் கோலி இருவரும் ஓய்வு பெற்றுவிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. இதன் மூலம், சர்வதேச T20 கிரிக்கெட்டில் அதிக ரன்கள் அடித்த வீரர் என்ற பெருமையைப் பாபர் அசாம் பெற்றுள்ளார்.