அதி தீவிர வறுமையை ஒழித்த இந்தியாவின் முதல் மாநிலம்: குவியும் வாழ்த்துக்கள்..!
WEBDUNIA TAMIL November 02, 2025 08:48 AM

கேரள மாநிலம் இந்தியாவில் அதி தீவிர வறுமையை ஒழித்த முதல் மாநிலமாக சாதனை படைத்துள்ளது.

கேரள தினத்தை முன்னிட்டுச் சட்டப்பேரவையில் பேசிய முதல்வர் பினராயி விஜயன், 2021ல் அளிக்கப்பட்ட முக்கிய தேர்தல் வாக்குறுதி நிறைவேற்றப்பட்டுள்ளதாக பெருமிதம் தெரிவித்தார்.

இந்த சாதனையைப் பெற, கேரளா ரூ.1,000 கோடிக்கும் அதிகமான முதலீட்டில், ஒரு பொதுவான கொள்கைக்கு பதிலாக நுண்ணிய திட்டமிடல் என்ற வியூகத்தை கையாண்டது. இதன் மூலம் 64,006 பாதிக்கப்படக்கூடிய குடும்பங்கள் கண்டறியப்பட்டு, அவற்றின் தனிப்பட்ட தேவைகளுக்கு ஏற்பத் திட்டங்கள் வகுக்கப்பட்டன.

20,648 குடும்பங்களுக்குத் தினமும் உணவு உறுதி செய்யப்பட்டது. 85,721 நபர்களுக்கு சிகிச்சை மற்றும் மருந்து வசதிகள் கிடைத்தன. 5,400-க்கும் மேற்பட்ட புதிய வீடுகள் கட்டப்பட்டன, 5,522 வீடுகள் சீரமைக்கப்பட்டன.

எனினும், எதிர்க்கட்சியான காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி முதல்வரின் அறிவிப்பை "முற்றிலும் மோசடி" எனக் கூறி சிறப்பு கூட்டத்தை புறக்கணித்தது. இதற்கு பதிலளித்த முதல்வர் விஜயன், "நாங்கள் சொன்னதை நடைமுறைப்படுத்தியுள்ளோம்" என்று உறுதியாக கூறினார்.

Edited by Mahendran

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.