வணிக பயன்பாட்டு சிலிண்டரின் விலை குறைந்தது,,!!
Top Tamil News November 02, 2025 08:48 AM
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை மற்றும் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றைக் கணக்கில் கொண்டு எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் கியாஸ் சிலிண்டர்களின் விலைகளை நிர்ணயித்து வருகின்றன. இதில் சமையல் கியாஸ் சிலிண்டர்களின் விலைகளை மாதத்தின் முதல் தேதியில் மாற்றி அமைத்து வருகிறது. அந்த வகையில் இன்று எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பின் படி வணிக பயன்பாட்டு சிலிண்டரின் விலை குறைந்துள்ளது

அதன்படி, சென்னையில் 19 கிலோ எடை கொண்ட வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை ரூ.4.50 குறைந்து ரூ.1,750க்கு விற்கப்படு்கிறது 14 கிலோ எடை கொண்ட வீட்டு உபயோக சிலிண்டர் விலை மாற்றமின்றி 868 ரூபாய் 50 காசுகள் என்ற நிலையில் நீடிக்கிறது.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.