இன்றைய டிஜிட்டல் உலகில், அரசுப் பள்ளி மாணவர்களின் அறிவாற்றலையும், ஆசிரியர்களின் புதுமையான கற்பித்தல் முறைகளையும் உலகறியச் செய்யும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகின்றன. அரசுப் பள்ளிகளில் வழங்கப்படும் தரமான கல்வி எவ்வாறு மாணவர்களைச் சென்றடைகிறது என்பதை வெளிச்சத்திற்குக் கொண்டுவரும் பல காணொளிகள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. அந்த வகையில், தற்போது ஒரு குறிப்பிட்ட அறிவியல் பரிசோதனை வீடியோ நெட்டிசன்களை வெகுவாகக் கவர்ந்துள்ளது. பொதுவாக, உயரமான இடத்திலிருந்து குறைவான இடத்தை நோக்கியே பொருட்கள் நகர்ந்து செல்லும். ஆனால், ஒரு குறிப்பிட்ட கூம்பு வடிவப் பொருள் மட்டும், உயரம் குறைவான இடத்திலிருந்து உயரம் அதிகமான இடத்தை நோக்கி எதிர்திசையில் நகர்ந்து செல்லும் ஆச்சரியமான நிகழ்வை அந்த வீடியோவில் மாணவர்கள் விளக்கியுள்ளனர்.
அரசுப் பள்ளி ஆசிரியரின் துணையுடன், இந்தப் புதிரான நிகழ்வுக்கான அறிவியல் காரணத்தையும் (ஈர்ப்பு மையம், சமநிலை) மாணவர்கள் மிகத் தெளிவாகவும், அருமையாகவும் விளக்கிப் பதிவிட்டுள்ளனர். இந்த விளக்கத்தைக் கண்ட நெட்டிசன்கள், “இப்படிப்பட்ட சுவாரஸ்யமான முறையில் எங்களுக்கும் யாராவது பாடங்களைச் சொல்லிக் கொடுத்திருந்தால், நாங்கள் பள்ளிக்கு மிகவும் ஆர்வமாகச் சென்றிருப்போம், ஒருநாள் கூட விடுமுறை எடுத்திருக்க மாட்டோம்” என்று நெகிழ்ச்சியுடன் கருத்துத் தெரிவித்து வருகின்றனர். அரசுப் பள்ளி ஆசிரியர்களின் இந்த முயற்சி, மாணவர்களிடையே அறிவியல் ஆர்வத்தை விதைப்பதுடன், பொதுவெளியில் அரசுப் பள்ளிகள் மீதான நேர்மறையான பார்வையை மேலும் வலுப்படுத்தியுள்ளது.
View this post on Instagram
A post shared by Kalaivani S (@sciencebeaker)