நடிகராக இருந்தாலும் அவ்வப்போது தனக்கு பிடித்த விஷயங்களை செய்து வருபவர் அஜித்குமார். விஜய்க்கு இணையான ரசிகர் பட்டாளம் இருந்தும் அதை தனது சுயநலத்திற்காகவும், சுய லாபத்திற்காகவும் பயன்படுத்திக் கொள்ளாதவர் இவர்.தனது ரசிகர்கள் அரசியல் தொடர்பான செயல்பாடுகளில் ஈடுபட்டார்கள் என்கிற ஒரே காரணத்துக்காக மொத்த ரசிகர் மன்றங்களையும் கலைத்தவர் அஜித்.
ஆனாலும் இவருக்கு ரசிகர்கள் குறைந்தபாடில்லை. திரைத்துறையில் ‘நீங்கள் உங்கள் வேலையை பாருங்கள். படத்தை பார்த்தால் மட்டும் போதும்.. அதை தாண்டி நடிகர்களை கொண்டாட வேண்டாம்.. நடிகர்களை கடவுளை போல பூஜிக்க வேண்டாம். அன்பு மட்டும் போதுமனது. அவர்களும் உங்களை போலவே ஒரு சாதாரண மனிதர்கள்தான்’ என சொன்ன முதல் நடிகர் அஜித் மட்டுமே.
சினிமாவில் நடிப்பது மட்டுமின்றி கார் ரேஸில் கலந்து கொள்வது, துப்பாக்கிச்சூடும் போட்டிகளில் கலந்து கொள்வது, ரிமோட் ஹெலிகாப்டர் இயக்குவது போன்ற பல விளையாட்டுகளில் அஜித்துக்கு ஈடுபாடு உண்டு. கார் ரேஸில் கலந்து கொண்ட பின் இதுவரை அவருக்கு 23 முறை அறுவை சிகிச்சையும் செய்யப்பட்டிருக்கிறது.சினிமாவை தவிர கார் ரேஸ் உள்ளிட்ட பல விஷயங்களிலும் அஜித் தொடர்ந்து ஈடுபட்டு வருவதால் ஒரு படம் முடித்த உடனே அடுத்த படம் என நடிக்கும் நடிகராக அஜித் இல்லை.
குட் பேட் அக்லி திரைப்படம் வெளியாகி கிட்டத்தட்ட ஏழு மாதங்கள் ஆன நிலையில் அஜித்தின் அடுத்த படம் பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு இதுவரை வெளியாகவில்லை. அதேநேரம் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் மீண்டும் அஜித் நடிப்பது மட்டும் உறுதியாகியிருக்கிறது. கடந்த பல மாதங்களாகவே அஜித் கார் ரேஸில் கலந்து கொண்டு வந்தார். அதன்பின் கார் ரேஸுக்கு பிரேக் விட்டுவிட்டு புதிய படத்தில் நடிக்கவிருக்கிறார். நவம்பர் முதல் வாரம் இந்த படத்தின் அதிகாரப்பூர் அறிவிப்பு வெளியாகும் என செய்திகள் வெளியானது. அஜித் ரசிகர்களும் இதை ஆவலோடு எதிர்பார்த்து காத்திருந்தார்கள்.
ஆனால் நேற்று ஊடகம் ஒன்றில் பேசிய அஜித் பட வேலைகள் நடந்து கொண்டிருக்கிறது. அனேகமாக 26 ஜனவரி மாதம் இந்த படத்தின் அப்டேட் வெளியாகும்.. கார் ரேஸ், சினிமா இரண்டையும் பேலன்ஸ் செய்து வருகிறேன் என சொல்லி இருக்கிறார். AK64 அப்டேட் விரைவில் வெளியாகும் என காத்திருந்த ரசிகர்கள் அஜித்தின் இந்த பதிலால் அப்செட் ஆகியுள்ளனர். ஒருவேளை ஷூட்டிங்கை இப்போது ஆரம்பித்துவிட்டு அறிவிப்பை 2 மாதங்கள் கழித்து வெளியிடவும் வாய்ப்பிருக்கிறது என்கிறார்கள்.