நியூசிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் கேன் வில்லியம்சன், சர்வதேச டி20 போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
35 வயதான வில்லியம்சன், 2011 ஆம் ஆண்டு டி20 போட்டிகளில் அறிமுகமானார். இதுவரை 93 டி20 ஆட்டங்களில் விளையாடிய அவர், 18 அரை சதங்களுடன் மொத்தம் 2,575 ரன்கள் குவித்துள்ளார். வில்லியம்சனின் இந்த திடீர் ஓய்வு அறிவிப்பு நியூசிலாந்து ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், “எதிர்பார்த்ததைவிட நீண்ட காலம் டி20 வடிவில் விளையாடியுள்ளேன். இந்த வடிவம் எனக்கு பல மறக்க முடியாத அனுபவங்களையும், இனிய நினைவுகளையும் வழங்கியுள்ளது. நியூசிலாந்து அணிக்காக டி20 போட்டிகளில் விளையாடிய அனுபவம் என்றென்றும் சிறப்பானதாக இருக்கும்” என தெரிவித்துள்ளார்.

இருப்பினும், வில்லியம்சன் டி20 லீக் போட்டிகளில் தொடர்ந்து விளையாடுவதாகவும், சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றாலும் ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் நியூசிலாந்து அணிக்காக தொடர்ந்தும் விளையாடுவதாகவும் தெரிவித்துள்ளார்.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!
உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?