இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீராங்கனையும், துணை கேப்டனுமான ஸ்மிருதி மந்தானா, தனது நீண்ட நாள் காதலரான பிரபல இந்தி திரைப்பட இசையமைப்பாளர் மற்றும் இயக்குநர் பாலஷ் முச்சாலை வரும் நவம்பர் 20ம் தேதி திருமணம் செய்துக் கொள்கிறார்.
மகளிர் உலகக்கோப்பையில் இந்திய அணியின் முக்கிய வீராங்கனையாக ஸ்மிருதி மந்தானா விளையாடி வருகிறார். அவர் கடந்த 2019ம் ஆண்டு முதல் பாலஷுடன் நெருக்கமாக பழகி வருவதாகவும், இருவரும் தங்கள் உறவை சமூக வலைதளங்களில் அதிகாரப்பூர்வமாக கடந்த வருடமே வெளியிட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

பாலஷ் முச்சால், சமூக ஊடகங்களில் ஸ்மிருதியுடன் எடுத்த சில புகைப்படங்களை பகிர்ந்து, “5 ❤️” எனும் குறிப்பு மட்டும் எழுதியிருந்தார். இதுவே இருவரும் காதலில் இருப்பதை உறுதிப்படுத்தியது. அந்த ஜோடி வரும் நவம்பர் 20ம் தேதி திருமணம் செய்ய தீர்மானித்துள்ளதாக *டைம்ஸ் ஆஃப் இந்தியா* செய்தி கூறுகிறது.
அவர்களின் திருமணம் மகாராஷ்டிராவின் சாங்க்லி மாவட்டத்தில், ஸ்மிருதி மந்தானாவின் சொந்த ஊரில் நடைபெற உள்ளது. நவம்பர் 20ம் தேதி முதல் திருமண நிகழ்ச்சிகள் தொடங்கும் எனவும், நெருங்கிய நண்பர்கள் மற்றும் குடும்பத்தினர் மட்டும் கலந்து கொள்வர் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.

பாலஷ் முச்சால் பிரபல பாடகி பாலக் முச்சாலின் தம்பி ஆவார். பல பாலிவுட் திரைப்படங்களுக்கு இசை அமைத்ததுடன், *Khelein Hum Jee Jaan Sey* என்ற திரைப்படத்தில் நடிகர் அபிஷேக் பச்சன், தீபிகா படுகோனே உடன் நடித்தும் உள்ளார்.
ஸ்மிருதி மந்தானா, மகளிர் கிரிக்கெட்டில் முன்னணி வீராங்கனையாக இருப்பதுடன், மகளிர் பிரீமியர் லீக் வரலாற்றில் அதிகபட்ச தொகைக்குக் (₹3.40 கோடி) வாங்கப்பட்ட வீராங்கனை என்ற பெருமையும் பெற்றுள்ளார்.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!
உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?