பெளர்ணமி கிரிவலம்... விழுப்புரம் - திருவண்ணாமலை இடையே சிறப்பு ரயில் இயக்கம்!
Dinamaalai November 02, 2025 01:48 PM

ஐப்பசி மாத பெளர்ணமி கிரிவலத்தை முன்னிட்டு விழுப்புரம் - திருவண்ணாமலை இடையே சிறப்பு ரயில் அறிவிக்கப்பட்டுள்ளது. மாதந்தோறும் பெளர்ணமி நாளில் கிரிவலம் செல்லும் பக்தர்களின் வசதியை கருத்தில் கொண்டு தெற்கு ரெயில்வே சிறப்பு ரெயில் சேவையை அறிவித்து வருகிறது. 

அருணாச்சலேஸ்வரர் கோவிலுக்கு அருகிலுள்ள அண்ணாமலையார் மலை சுற்றி கிரிவலம் செல்லும் வழக்கம் பல்லாண்டுகளாக நடைபெற்று வருகிறது. நவம்பர் மாத பவுர்ணமி கிரிவலம் வரும் நவம்பர் 4ம் தேதி நடைபெறவுள்ள நிலையில், அதிகமான பக்தர்கள் திருவண்ணாமலைக்கு செல்லும் சூழல் உருவாகியுள்ளது.

இதையடுத்து, கூட்ட நெரிசலை தவிர்க்கும் வகையில் விழுப்புரம் – திருவண்ணாமலை இடையே 8 பெட்டிகள் கொண்ட மெமு சிறப்பு ரெயில்கள் இயக்கப்படும் என தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.

அதன்படி, விழுப்புரத்தில் இருந்து காலை 10.10 மணிக்கு புறப்படும் சிறப்பு ரெயில் (எண் 06130) காலை 11.45 மணிக்கு திருவண்ணாமலை சென்றடையும். மறுமார்க்கத்தில், திருவண்ணாமலையில் இருந்து மதியம் 12.40 மணிக்கு புறப்படும் சிறப்பு ரெயில் (எண் 06129) மதியம் 2.15 மணிக்கு விழுப்புரம் வந்தடையும்.

இந்த ரெயில்கள் வெங்கடேசபுரம், மாம்பழப்பட்டு, ஆயந்தூர், திருக்கோவிலூர், ஆதிச்சனூர், அண்டம்பள்ளம் மற்றும் தண்டரை நிலையங்களில் நின்று செல்லும் என தெற்கு ரெயில்வே தெரிவித்துள்ளது.

பவுர்ணமி கிரிவலத்துக்காக திருவண்ணாமலைக்கு செல்வோர் இந்த சிறப்பு சேவையினை பயன்படுத்திக் கொள்ளுமாறு ரெயில்வே நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.