சபரிமலை மண்டல பூஜை காலம் வரும் நவம்பர் 17ம் தேதி துவங்கவுள்ளது. இதற்காக அய்யப்பன் கோவில் நடை நவம்பர் 16-ம் தேதி மாலை 5 மணிக்கு திறக்கப்படும். 62 நாட்கள் தொடர்ச்சியாக நடைபெறும் இந்த மண்டல காலத்தை முன்னிட்டு பக்தர்கள் தரிசனத்திற்கான ஆன்லைன் முன்பதிவு தொடங்கியது.
பக்தர்கள் sabarimalaonline.org எனும் இணையதளம் மூலம் முன்பதிவு செய்யலாம். தினமும் 70,000 பக்தர்களுக்கு ஆன்லைன் மூலம், மேலும் 20,000 பக்தர்களுக்கு ஸ்பாட் புக்கிங் மூலம் அனுமதி வழங்கப்படும் என திருவிதாங்கூர் தேவசம்போர்டு அறிவித்துள்ளது.

இந்தாண்டு சபரிமலை பயணிகளுக்கான விபத்து இன்சூரன்ஸ் திட்டம் விரிவாக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு நான்கு மாவட்டங்களுக்கு மட்டுமே வழங்கப்பட்ட இந்த திட்டம், இவ்வாண்டு முழு கேரளா மாநிலத்திற்கும் பொருந்தும் வகையில் மாற்றப்பட்டுள்ளது. எந்த பகுதியில் விபத்து நடந்தாலும் ரூ.5 லட்சம் வரை காப்பீடு வழங்கப்படும். மேலும் இந்த இன்சூரன்ஸ் திட்டம் தேவசம்போர்டு நிரந்தர மற்றும் தினக்கூலி ஊழியர்களுக்கும், பிற அரசுத் துறை பணியாளர்களுக்கும் பொருந்தும்.
சபரிமலை பயணத்தின் போது மரணமடையும் பக்தர்களின் உடலை கேரளாவுக்குள் கொண்டு செல்ல ரூ.30,000வும், வெளிமாநிலங்களுக்கு கொண்டு செல்ல ரூ.1 லட்சம் ஆம்புலன்ஸ் உதவித் தொகையும் வழங்கப்படும்.

மேலும், நிலக்கல் முதல் சன்னிதானம் வரை பயணத்தின் போது மாரடைப்பு உள்ளிட்ட காரணங்களால் மரணம் அடைந்தால் ரூ.3 லட்சம் நிதி உதவி வழங்கப்படும். இதற்கான விண்ணப்பத்தில் பக்தர்களின் விருசுவல் கியூ முன்பதிவு கூப்பன் அவசியமாக பரிசீலிக்கப்படும். எனவே, அனைத்து பக்தர்களும் ஆன்லைன் முன்பதிவு அவசியம் செய்து கொள்ளுமாறு திருவிதாங்கூர் தேவசம்போர்டு கேட்டுக் கொண்டுள்ளது.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!
உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?