Vishnu Vishal : இரண்டு வானம் படத்தின் கதை இதுதான் – விஷ்ணு விஷால்!
TV9 Tamil News November 02, 2025 08:48 PM

நடிகர் விஷ்ணு விஷால் (Vishnu Vishal) தமிழ் மற்றும் தெலுங்கு போன்ற மொழிகளில் படங்களில் நடித்து வருகிறார். இவரின் நடிப்பில் பல்வேறு மாறுபட்ட கதைக்களத்தில் திரைப்படங்கள் வெளியாகி மக்களிடையே சிறந்த வரவேற்புகளை பெற்றுவருகின்றன. அந்த வகையில் இவரின் நடிப்பிலும், தயாரிப்பிலும் மிக பிரம்மாண்டமாக வெளியாகியிருந்த படம் ஆர்யன் (Aaryan). இப்படத்தை இயக்குநர் பிரவீன் கே (Praveen K) இயக்க,  விஷ்ணு விஷால் மற்றும் ஷ்ரத்தா ஸ்ரீநாத் (Shraddha Srinath) இணைந்து நடித்திருந்தனர். மேலும் இப்படத்தில் செல்வராகவன் சைக்கோ வில்லனாக நடித்து அசத்தியிருந்தார். மேலும் இதில் நடிகைகள் வாணி போஜன் மற்றும் வாணி கபூர் போன்ற நடிகைகள் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த படம் கடந்த 2025 அக்டோபர் 31ம் தேதி முதல் உலகமெங்கும் வெளியிடப்பட்டிருந்தது. இந்த படத்தின் ப்ரோமோஷன் போது நேர்காணல் ஒன்றில் பேசிய நடிகர் விஷ்ணு விஷால், இவர் மமிதா பைஜுவுடன் (Mamitha Baiju) இணைந்து நடித்திருக்கும் இரண்டு வானம் (Irandu Vaanam) படத்தின் கதையை பற்றி ஓபனாக பேசியுள்ளார்.

இதையும் படிங்க : தமிழ் சினிமாவில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்திய ஜெய் பீம் படம் 4 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது!

இரண்டு வானம் திரைப்படம் குறித்து பேசிய விஷ்ணு விஷால்:

அந்த நேர்காணலில் பேசிய விஷ்ணு விஷால், “இரண்டு வானம் திரைப்படத்தின் மையக் கதையை பற்றி என்னால் கூறமுடியாது. ஆனால், அதை பற்றி சில விஷயத்தை என்னால் சொல்ல முடியும் என நினைக்கிறன். இந்த இரண்டு வானம் படமானது ஒரு காதல் கதை , ஆனால் அதற்கு உள்ளே பார்க்கும்போது இப்படத்தில் ஆச்சரியப்படுத்தும் சுவாரஸ்ய விஷயம் ஒன்று இருக்கிறது.

இதையும் படிங்க: இனி ஆட்டம் வேற மாதிரி இருக்கும்… பிக்பாஸ் வீட்டிற்குள் ஒரே நாளில் நுழைந்த 4 வைல்கார்ட் போட்டியாளர்கள்!

இந்த படத்தின் கதையை நான் முதலில் கேட்கும்போது, இயக்குநர் ராமிடம் இதுபோன்று உண்மையிலே நடக்குமா? என கேட்டிருந்தேன். மேலும் இப்படத்தை இரண்டாம் பாதியில் மிகவும் அழகான உணர்ச்சிகள் மிகுந்த காட்சியும் இருக்கிறது. இந்த கதையை இயக்குனர் ராம் என்னிடம் சுமார் 6 மணி நேரமாக சொன்னார். அப்போது இப்படத்தின் க்ளைமேக்ஸ் சொல்லும்போது அவரும் உணர்ச்சிவசப்பட்டார்” என அதில் அவர் தெரிவித்திருந்தார்.

இரண்டு வானம் திரைப்படம் குறித்து விஷ்ணு விஷால் வெளியிட்ட பதிவு :

1st – Comedy.
2nd – Thriller.
3rd – Love.

Hattrick loading with @dir_ramkumar 🤗

Here’s the first look poster of #IranduVaanam.@_mamithabaiju

A @dhibuofficial musical.

@arjun1on @dinesh_k_babu @Sanlokesh @artdirectorgopi @sureshchandra @Vinciraj_NC @saregamasouth pic.twitter.com/Jo9KPzHoXa

— VISHNU VISHAL – VV (@TheVishnuVishal)

இந்த இரண்டு வானம் படத்தை இயக்குநர் ராம்குமார் இயக்கியுள்ளார். இப்படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்துவருகிறது. இயக்குனர் ராம்குமார் முண்டாசுப்பட்டி மற்றும் ராட்சசன் போன்ற படங்களை இயக்கியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. அதை தொடர்ந்து விஷ்ணு விஷாலின் இரண்டு வானம் படத்தையும் இயக்கியுள்ளார்.

இப்படத்தில் கதாநாயகியாக மமிதா பைஜூ நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படத்தின் ஷூட்டிங் முழுமையாக நிறைவடைந்த நிலையில் வரும் 2026 ஆண்டு பிப்ரவரி மாதத்தில் வெளியிட திட்டமிட்டுள்ளதாக விஷ்ணு விஷால் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.