மெக்சிகோவில் சூப்பர் மார்க்கெட்டில் தீ விபத்து .... 23 பேர் பலி!
Dinamaalai November 02, 2025 08:48 PM

 

மெக்சிகோ நாட்டில் உள்ள சோனோரா மாகாண தலைநகரான ஹெர்மோசில்லோவில் உள்ள சூப்பர் மார்க்கெட்டில் சனிக்கிழமை ஏற்பட்ட தீ விபத்தில் 23 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் குழந்தைகளும் அடங்குவர். திடீரென தீப்பிடித்ததால் கடை முழுவதும் புகையால் மூடப்பட்டு பலர் மூச்சுத்திணறி உயிரிழந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த விபத்தில் மேலும் 11 பேர் தீக்காயங்களுடன் காயமடைந்தனர். அவர்கள் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். முதல்கட்ட விசாரணையில் பழுதடைந்த மின்மாற்றி வெடித்ததுதான் தீ விபத்துக்குக் காரணமாக இருக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தீயணைப்புத் துறையினர் விரிவான விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த துயர சம்பவத்தில் பலியானோரின் குடும்பத்தினருக்கு மெக்சிகோ அதிபர் கிளாடியா ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளார். மேலும், காயமடைந்தோர் மற்றும் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உதவ ஆதரவு குழுக்களை உடனடியாக அனுப்ப உள்துறை அமைச்சருக்கு அவர் உத்தரவிட்டுள்ளார்.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.