Viral Video : அபராதத்தில் இருந்து தப்பிக்க இப்படியா.. ஹெல்மெட் இல்லாததால் கடாயால் தலையை மறைத்த நபர்!
TV9 Tamil News November 02, 2025 08:48 PM

ஸ்மார்ட்போன்கள் மற்றும் சமூக ஊடகங்களில் உதியாவில் உலகில் நம்மை சுற்றி நடைபெறும் வித்தியாசமான மற்றும் சுவாரஸ்யமான சம்பவங்கள் தொடர்பான வீடியோக்கள் ஒவ்வொரு நாளும் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றன. அந்த வீடியோக்களில் சில சிறிப்பை அடக்க முடியாத அளவுக்கு நகைச்சுவையானவையாக இருக்கும். அந்த வகையில், ஹெல்மெட் அணியாமல் சென்ற நபர் ஒருவர் அபராதத்தில் இருந்து தப்பிக்க சமைக்கும் கடாயை ஹெல்மெட்டாக அணிந்துச் சென்ற வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த நிலையில், அந்த வைரல் வீடியோவில் இடம்பெற்றுள்ளது என்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

ஹெல்மெட் இல்லாததால் கடாயால் தலையை மறைத்த நபர்

சாலையில் இருசக்கர வாகனத்தில் செல்லும்போது ஹெல்மெட் அணிய வேண்டும் என்பது கட்டாய விதியாக உள்ளது. வாகனம் ஓட்டும் நபர், பின்னால் அமர்ந்து செல்லும் நபர் ஆகிய இருவருக்குமே இது பொருந்தும். இந்த நிலையில், பொதுமக்கள் ஹெல்மெட் அணிவதை வழக்கமாக வைத்திருக்க வேண்டும் என்பதற்காக, ஹெல்மெட் அணியாமல் பயணம் செய்யும் நபர்களுக்கு காவல் துறையினர் அபராதம் விதித்து வருகின்றனர். அந்த வகையில், ஹெல்மெட் அணியாமல் சென்ற நபர், அபராதத்தில் இருந்து தப்பித்துக்கொள்ள கடாயை எடுத்து தனது தலையில் கவிழ்த்துக்கொண்டுள்ளார். அது தொடர்பான வீடியோ தான் தற்போது வைரலாகி வருகிறது.

Viral Video : சான் பிரான்சிஸ்கோ வானில் பறந்த ராட்சத வெள்ளை விமானம்.. குழம்பிய மக்கள்!

இணையத்தில் வைரலாகும் வீடியோ

Peak Bengaluru moment! In a scene straight out of a comedy sketch, a pillion rider near Roopena Agrahara was spotted trying to escape a traffic challan by covering his head with wait for it a frying pan instead of a helmet.Yes, a frying pan. Because apparently, when life gives… pic.twitter.com/jhFWCTrvKi

— Karnataka Portfolio (@karnatakaportf)

இணையத்தில் வைரலாகி வரும் அந்த வீடியோவில் போக்குவரத்து மிகுந்த சாலையில் வாகனங்கள் நின்றுக்கொண்டு இருக்கின்றன. அந்த கூட்டத்தில் நின்றுக்கொண்டு இருக்கும் ஒரு இருசக்கர வாகனத்தின் பின்னால் அமர்ந்திருக்கும் நபர் ஒருவர் தான் ஹெல்மெட் அணியாமல் வந்த நிலையில், சமையலுக்கு பயன்படுத்தும் கடாயை வைத்து தனது தலையை மறைத்துக்கொண்டு அமர்ந்திருக்கிறார். இவை அனைத்தும் அந்த வீடியோ காட்சியில் பதிவாகியுள்ளது.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.