சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி துபாயில் நடந்த ஆசியக் கோப்பையை வென்றபோது, இறுதிப் போட்டி உட்பட இத்தொடரில் இந்திய அணி மூன்று முறை பாகிஸ்தானை வீழ்த்தியது.
இந்த வெற்றியின்போது, பஹல்காம் விவகாரம் காரணமாக இந்திய வீரர்கள் பாகிஸ்தான் வீரர்களுடன் கைகுலுக்க மறுத்ததுடன், பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத் தலைவரும், பாகிஸ்தான் அமைச்சருமான மோசின் நக்வி ஆசிய கிரிக்கெட் கவுன்சிலின் (ACC) தலைவராக இருந்ததால், அவரிடம் இருந்து கோப்பையைப் பெறவும் மறுத்துவிட்டனர்.
இதனால், நக்வி ஆசியக் கோப்பையைத் தன்னுடன் எடுத்துச் சென்றுவிட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது. இந்த நிலையில், தற்போது பிசிசிஐ-க்கும் (BCCI) மோசின் நக்விக்கும் இடையே நடந்த பேச்சுவார்த்தையின் முடிவில் சுமுகமான முடிவு எட்டப்பட்டு, இந்தியாவுக்கு ஆசியக் கோப்பையை வழங்க நக்வி ஒப்புதல் அளித்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.