பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேனான அஸாம் கான், சக வீரர்கள் பொதுவாகத் தங்கள் கஷ்டங்களை வெளிப்படுத்தாத நிலையில், தான் சந்தித்த ஒரு சவாலான தருணத்தை ஒரு பாட்காஸ்ட் வீடியோவில் வெளிப்படையாகப் பேசியுள்ளார். இங்கிலாந்து வேகப்பந்துவீச்சாளர் மார்க் வுட்டின் அதிவேக பந்துவீச்சை எதிர்கொண்ட அனுபவம்தான் அது.

2024 இங்கிலாந்து சுற்றுப்பயணத்தின்போது ஓவல் மைதானத்தில் நடந்த நான்காவது டி20 போட்டியில்தான் இந்தச் சம்பவம் நடந்தது. பாகிஸ்தான் 84/4 என்ற நிலையில் தடுமாறிக் கொண்டிருந்தபோது அஸாம் கான் களமிறங்கினார். மார்க் வுட்டின் முதல் பவுன்சரை லாவகமாக விட்டுவிட்ட அஸாம், “சரி, எங்கள் நாட்டிலும் 150 கி.மீ வேகத்தில் பந்துவீசுபவர்கள் இருக்கிறார்கள்” என்று நினைத்துள்ளார்.
ஆனால், இரண்டாவது பவுன்சர் வந்தபோதுதான் அவர் முற்றிலும் திகைத்துவிட்டாராம். அஸாம் கான், “அந்த இரண்டாவது பவுன்சர் வந்தபோது, என் வாழ்க்கை ஒரு கணம் அப்படியே நின்றுவிட்டது! எனக்கு என்ன நடந்தது என்றே தெரியவில்லை!” என்று அந்தத் தருணத்தின் வேகத்தையும் அதிர்ச்சியையும் விவரித்துள்ளார்.
“>
பந்து தனது கையுறையில் பட்ட வலியை உணர்ந்து அவுட் என்று தெரிந்ததால், அவர் வீடியோ மறுபரிசீலனை (Review) எடுக்காமல் பெவிலியனுக்கு வெளியேற முடிவு செய்தார். அப்போது, ஓவல் மைதானத்தில் ரசிகர்கள் திட்டியதையும், அவமானப்படுத்தியதையும் அவர் நினைவு கூர்ந்துள்ளார்.
“>
மேலும், அந்தப் போட்டியில் அவர் சில கேட்சுகளைத் தவறவிட்டார் என்றும், அன்று மைதானத்தில் ஷதாப் கானின் ஆதரவுடன் தான் அழுதது இன்றும் தன்னை வேட்டையாடுவதாகவும் அஸாம் கான் கூறியுள்ளார். அவர் அந்தப் போட்டியில் 5 பந்துகளை எதிர்கொண்டு ரன் ஏதும் எடுக்காமல் அவுட்டானார்.!