பற்களை (Tooth) சரியாக பராமரிக்காததால், பல் சொத்தை மற்றும் குழிகள் போன்ற பல பிரச்சனைகள் ஏற்படும். சில நேரங்களில் பற்கள் சொத்தையாகி, பற்களை பிடுங்க வேண்டிய சூழல் உண்டாகும். பல் பிடுங்குவதில் பல நன்மைகள் உள்ளன. முதலாவதாக, இது வாய்வழி தொற்று மற்றும் வலியைக் குறைக்கிறது. ஒரு சிதைந்த அல்லது பலவீனமான பல் சுற்றியுள்ள பற்களையும் பாதிக்கலாம், அவற்றை அகற்றுவதன் மூலம் முழு வாயின் ஆரோக்கியத்தையும் மேம்படுத்தலாம். இதுபோன்ற சூழ்நிலையில், பற்களை பிடுங்கிய பிறகு, வாய் ஆரோக்கியத்தை கவனித்து கொள்வது மிகவும் முக்கியம். அப்போதுதான் பல்லில் வலி குறைந்து, குணமடைதலும் வேகமாக நடைபெறும்.
பல் பிடுங்கிய பிறகு, பாதிக்கப்பட்ட பகுதியை சுத்தமாக வைத்திருப்பது மிகவும் முக்கியம். நீங்கள் முறையாக பல் பிடுங்கிய பிறகு, கவனிக்காமல் விட்டால் தொற்று, நீடித்த இரத்தப்போக்கு, வீக்கம், வலி மற்றும் சில நேரங்களில் நரம்புகள் அல்லது வேர்களுக்கு காயம் போன்றவை ஏற்படலாம்.
ALSO READ: நீண்ட நாட்களாக ஒரே டூத் பிரஷ்..? ஏன் உடனடியாக மாற்றவது முக்கியம்..?
பல் பிரித்தெடுத்த பிறகு கவனிக்க வேண்டிய சில விஷயம்:ALSO READ: பல் ஆரோக்கியத்தை அழிக்கும் பழக்கவழக்கங்கள்.. இவற்றை தவிர்ப்பது நல்லது..!
பல் பிடுங்கிய பிறகு வேசான உணவுகளை சாப்பிடுவது மிகவும் முக்கியம். அதன்படி, காரமான உணவுகளை தவிர்க்கவும். இந்த வகை உணவுமுறை மருந்துகளின் செயல்திறனை குறைக்கும் என்று பல மருத்துவர்கள் கூறுகின்றனர். பல் பிடுங்கி முதல் 2 முதல் 3 நாட்களுக்கு முட்டை, தயிர் உள்ளிட்ட லேசான உணவுகளை எடுத்து கொள்ளலாம்.