பொதுவாக இன்றைய அவசரமான உலகில் மன அழுத்தம் என்பது தவிர்க்க முடியாதது .சிலர் எந்நேரமும் ஆபீஸ் வீடு என்று எந்த விதமான பொழுது போக்குமில்லாமல் இருப்பதுண்டு .அவர்களுக்கு மன அழுத்தம் ஏற்பட்டு உடல் நிலை சீக்கிரம் கெட வாய்ப்புண்டு இந்த பதிவில் எந்த காரணத்தினால் மன அழுத்தம் உண்டாகும் என்று பார்க்கலாம்
1. காலை உணவை சாப்பிடாமல் கூட சிலர் வேலைக்கு செல்வதுண்டு. இதனால் அன்றைய நாள் ஒருவித மன அழுத்தத்துடனேயே இருக்கும்.
2.சிலர் டிவி பார்ப்பதுண்டு ., உண்மையில் டிவி பார்ப்பது மன அழுத்தத்தைத் தான் அதிகரிக்கும்.
3. சிலர் புகை பிடிப்பர் .இப்படி புகைப்பிடித்தால், அது மனதை அழுத்தம் அடையச் செய்து, வேறு சில தீவிர பிரச்சனைகளை உண்டாக்கும்.
4.சிலர் எப்போதுமே அலுவலகத்தில் இருப்பர் .இப்படி இருந்தால், அது மனதை எப்போதும் ஒருவித அழுத்தத்திலேயே வைத்திருக்கும்.
5. சில சமயங்களில் அந்த அழுத்தமானது மனதிற்குள்ளேயே அதிகரித்து, மாரடைப்பை ஏற்படுத்திவிடும்.
6. சரியான நேரத்தில், சரியான உணவை சாப்பிடாமல் இருந்தால், அது உடல் எடையை அதிகரிப்பதோடு, மன அழுத்தத்தையும் அதிகரிக்கும்.
7. ஆரோக்கியமற்ற உணவுகளை சாப்பிடுவதால், . அது உடல் எடையை அதிகரிப்பதோடு, இன்னும் மன அழுத்தத்தை அப்படியே தான் வைத்திருக்கும்.
8.சிலர் உடற்பயிற்சி செய்வதில்லை .இப்படி எக்சர்சைஸ் இல்லாவிட்டால், மன அழுத்தம் குறையாமல், இன்னும் தான் அதிகரிக்கும்.
9., சிலருக்கு அழகைப் பராமரிக்க நேரமின்றி இல்லாததால் வெளியே செல்லும் போது, மற்றவரை பார்க்கும் போது நாம் அழகாக இல்லை என்ற எண்ணத்திலேயே மனதில் ஒருவித அழுத்தம் ஏற்படுகிறது.
10. நிறைய மக்கள் குறைந்த நேரம் மட்டும் தூங்குவதால், அது மன அழுத்தத்தை ஏற்படுத்திவிடும்.