தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு அரையாண்டுத் தேர்வு அட்டவணை அறிவிக்கப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் வரும் டிசம்பர் 24-ஆம் தேதி முதல் ஜனவரி 4ம் தேதி வரை மாணவர்களுக்கு மொத்தம் 12 நாள் சிறப்பு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தகவல் வெளியாகியதுடன், மாணவர்கள் மத்தியில் பெரும் உற்சாகம் நிலவுகிறது.

2025–26 கல்வியாண்டிற்கான அரையாண்டுத் தேர்வுகள் டிசம்பர் 15 முதல் 23 ஆம் தேதி வரை நடைபெறும். தேர்வு நிறைவடைந்த மறுநாளே விடுமுறை ஆரம்பமாக இருப்பதால், கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு கொண்டாட்டங்களை குடும்பத்துடன் மகிழ்ச்சியாகக் கழிக்க மாணவர்கள் திட்டமிட்டு வருகின்றனர்.
இந்த கல்வியாண்டில் ஆசிரியர் சங்கங்களின் கோரிக்கையை ஏற்று, பள்ளிகளின் மொத்த வேலை நாட்கள் 220-இலிருந்து 210 ஆக குறைக்கப்பட்டுள்ளன. குறைக்கப்பட்ட 10 நாட்கள் ஆசிரியர்களுக்கான பயிற்சி மற்றும் கல்வி மேம்பாட்டு பணிகளுக்காக பயன்படுத்தப்படும் என பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.

முன்னதாக காலாண்டுத் தேர்விற்குப் பிறகு வழங்கப்பட்ட 9 நாள் விடுமுறைக்கு இது தொடர்ச்சியாக அமையும் நிலையில், மாணவர்களிடையே ‘‘குளிர்கால விடுமுறை’’ அனுபவம் உருவாகியுள்ளது. விரைவில் ஒவ்வொரு வகுப்புக்கும் தனித்த தேர்வு அட்டவணை வெளியிடப்படும் என கூறப்பட்டுள்ளது.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
ஐப்பசி மாசத்துல இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட மழை
ஐப்பசியில இந்த 6 ராசிக்காரங்க யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க
வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!