எந்தெந்த பண்டிகை ஞாயிற்றுக்கிழமை வருகிறது? 2026ம் ஆண்டுக்கான அரசு பொது விடுமுறை பட்டியல் வெளியீடு!
Dinamaalai November 12, 2025 09:48 AM

தமிழக அரசு, 2026-ம் ஆண்டுக்கான அரசு பொது விடுமுறை நாட்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது. அடுத்த ஆண்டு முழுவதும் மொத்தம் 24 நாட்கள் அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு பொது விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளன.

ஒவ்வொரு ஆண்டும் போல், 2026-க்கும் மத மற்றும் தேசிய முக்கியத்துவம் வாய்ந்த தினங்கள் அடிப்படையில் அரசு விடுமுறை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதன்படி, ஆங்கிலப் புத்தாண்டு, பொங்கல், திருவள்ளுவர் தினம், உழவர் தினம், தைப்பூசம், குடியரசு தினம், தெலுங்கு வருடப் பிறப்பு, மகாவீர் ஜெயந்தி, புனித வெள்ளி, தமிழ்ப் புத்தாண்டு, ரம்ஜான், மே தினம், பக்ரீத், மொகரம், சுதந்திர தினம், கிருஷ்ண ஜெயந்தி, விநாயகர் சதுர்த்தி, மிலாது நபி, காந்தி ஜெயந்தி, ஆயுத பூஜை, விஜயதசமி, தீபாவளி மற்றும் கிறிஸ்துமஸ் ஆகிய தினங்கள் பொது விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளன.

அதே நேரத்தில், ஏப்ரல் 1ம் தேதி வணிக மற்றும் கூட்டுறவு வங்கிகளுக்கு மட்டும் “ஆண்டு கணக்கு முடிவு” காரணமாக தனிப்பட்ட விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. அதிகபட்சமாக ஜனவரி மாதத்தில் 5 விடுமுறைகள் உள்ளன. மார்ச், ஏப்ரல் மற்றும் அக்டோபர் மாதங்களில் தலா 3 விடுமுறை நாட்கள் வரவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக, தைப்பூசம் மற்றும் தீபாவளி பண்டிகைகள் 2026-ம் ஆண்டில் ஞாயிற்றுக்கிழமையில் வருவது குறிப்பிடத்தக்கது. இதனால் ஊழியர்களிடையே சிறிய ஏமாற்றம் நிலவினாலும், பிற விடுமுறைகளின் தொடர்ச்சியான அமைப்பு சிலருக்கு நீண்ட வார இறுதி விடுமுறைகளை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அரசாணை படி, இந்த விடுமுறைகள் மாநில அரசு அலுவலகங்கள், கல்வி நிறுவனங்கள், நீதிமன்றங்கள் மற்றும் அரசாங்க அமைப்புகளுக்கு பொருந்தும்.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

ஐப்பசி மாசத்துல இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட மழை

ஐப்பசியில இந்த 6 ராசிக்காரங்க யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.