இந்த பருப்பை சாப்பிடுவதால் சிறுநீரக கற்கள் உருவாவதைத் தடுக்கலாம்
Top Tamil News November 12, 2025 09:48 AM

பொதுவாக முந்திரி பருப்பு நம் ஆரோக்கியத்துக்கு நன்மை சேர்க்கும் ஆற்றல் கொண்டது .இந்த பருப்பை நாம் உண்ணும் உணவில் சேர்த்து வந்தால் நம் உடலுக்கு பல்வேறு மருத்துவ நன்மைகளை கொடுக்க கூடியது இந்த முந்திரி பருப்பு மூலம் நமக்கு கிடைக்கும் நன்மைகள் பற்றி இந்த பதிவில் பார்க்கலாம் 

1.ஆரோக்கியம் மிகுந்த முந்திரி பருப்பில் அதிகமாக கலோரி உள்ளது. 
2.ஆரோக்கியமான முந்திரி பருப்பில் உடலுக்கு தேவையான நார்ச்சத்து, வைட்டமின்கள், கனிம தாது, இரும்பு, காப்பர், செலினியம், பாஸ்பரஸ், மெக்னீசியம், மற்றும் துத்தநாகம் போன்ற கனிம தாதுப்பொருள்கள் அதிக அளவில் உள்ளது.
3.மேலும் தாவர வேதியங்கள் அல்லது தாவர ஊட்டச்சத்துகள், நோய் எதிர்ப்பூக்கிகள் மற்றும் புரதங்களும் முந்திரி பருப்பில் அதிகமாக உள்ளன.
4.முந்திரி பருப்பில் புற்றுநோயினை வராமல் தடுக்கும் ஆற்றல் அதிகம் உள்ளது   
5.தினசரி சிறதளவு முந்திரிப் பருப்பைச் சாப்பிட்டுவந்தால், ரத்தஅழுத்தம் சீராக இருக்கும். 
6.முந்திரி பருப்பின் மூலம் சிறுநீரக கற்கள் உருவாவதைத் தடுக்கலாம்.
7.முந்திரி பருப்பிற்கு செல்கள் முதிர்ச்சி அடைவதை கட்டுப்படுத்தும் ஆற்றல் உண்டு. 
8.மேலும் முந்திரி பருப்பில் இதயத்திற்கு நன்மை தரக்கூடிய கொழுப்பு அதிகம்  உள்ளது. 
9.மேலும் ஆரோக்கியம் மிகுந்த முந்திரி பருப்பு உடலுக்கு தீமை விளைவிக்ககூடிய கொலஸ்டிராலை குறைத்து நன்மை தரக்கூடிய கொலஸ்டிராலை அதிரிக்க செய்கிறது.
10.முந்திரி பருப்பின் மூலம் செரிமான பிரச்சனை ஏற்படுவதைத் தடுக்கலாம். 
11.உயிரணு உற்பத்தி, ஜீரணம் ஆகியவற்றிலும் முந்திரி பருப்பு பங்கெடுக்கிறது

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.