எம்.கே.தியாகராஜ பாகவதரின் வாழ்க்கை வரலாற்றை தழுவி எடுக்கப்பட்ட காந்தா திரைப்படத்திற்கு தடைகோரி பேரன் வழக்கு தொடுத்துள்ள நிலையில், தயாரிப்பு நிறுவனங்கள் பதில் தர சிட்டி சிவில் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. நடிகர் துல்கர் சல்மான் நடித்துள்ள காந்தா திரைப்படத்துக்கு தடை கோரி பழம்பெரும் நடிகர் எம்.கே.தியாகராஜ பாகவதரின் மகள் வழி பேரன் மனு அளித்துள்ளார்.
இயக்குநர் செல்வமணி செல்வராஜ் இயக்கத்தில், நடிகர் துல்கர் சல்மான் நாயகனாக நடித்துள்ள திரைப்படம் "காந்தா”. இந்தப் படம், மறைந்த நடிகர் தியாகராஜ பாகவதரின் வாழ்க்கையை மையமாகக் கொண்டு உருவாகியுள்ளதாகக் கூறப்படுகிறது. டீசர், டிரைலரால் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய இந்தத் திரைப்படம், வரும் நவம்பர் 14ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

இந்த நிலையில், இப்படம் தியாகராஜ பாகவதரின் வாழ்க்கையைத் தழுவி எழுதப்பட்ட படமென்பதால், அவரின் மகள் வழிப்பேரன் சென்னை உரிமையில் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். அதில், தியாகராஜ பாகவதரின் சட்டப்பூர்வ வாரிசுகளிடமிருந்து அனுமதி வாங்கிய பின்பே காந்தா திரைப்படத்தை வெளியிட வேண்டும் என்றும் அதுவரை இப்படத்திற்குத் தடை விதிக்க வேண்டுமென்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. வழக்கை விசாரித்த நீதிபதி, இது குறித்து தயாரிப்பாளரான துல்கர் சல்மான் பதிலளிக்க வேண்டும் என உத்தரவு பிறப்பித்துள்ளார்.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
ஐப்பசி மாசத்துல இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட மழை
ஐப்பசியில இந்த 6 ராசிக்காரங்க யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க
வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!