நவ.22ல் நெல்லையில் மாடு மேய்க்கும் போராட்டம்... சீமான் அறிவிப்பு!
Dinamaalai November 12, 2025 11:48 AM

நெல்லை மாவட்டம் பணகுடி அருகேயுள்ள மகேந்திரகிரி மலையில் தடையை மீறி நவம்பர் 22-ஆம் தேதி மாடு மேய்க்கும் போராட்டம் நடைபெறவுள்ளதாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிவித்துள்ளார்.

மகேந்திரகிரி மலையில் மாடு மேய்வதைத் தடை செய்த வனத்துறை முடிவை எதிர்த்து, அந்தப் பகுதியில் வசிக்கும் பழங்குடியின மக்களுக்கு பாரம்பரிய உரிமை வழங்க வேண்டும் என நாம்தமிழர் கட்சி தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. இதன் தொடர்ச்சியாக, “பாரம்பரிய உரிமையை மீட்டெடுப்போம்” என்ற கோஷத்துடன் போராட்டம் நடைபெறும் என கட்சித் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், அதே நாளில் அந்த பகுதியில் வன உரிமை கிராம சபை அறிவிப்பு பதாகையையும் சீமான் திறந்து வைப்பார் என்றும், பல மாவட்டங்களிலிருந்து கட்சித் தொண்டர்கள் பெருமளவில் பங்கேற்க உள்ளனர் என்றும் நாதக நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

ஐப்பசி மாசத்துல இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட மழை

ஐப்பசியில இந்த 6 ராசிக்காரங்க யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.