பெண்களின் பாதுகாப்பை வலுப்படுத்தும் நோக்கில், ரூ.12 கோடி செலவில் தயாரிக்கப்பட்ட 80 இளஞ்சிவப்பு ரோந்து வாகனங்களின் சேவைகளை முதல்வர் மு.க. ஸ்டாலின் நேற்று தலைமைச் செயலகத்தில் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
மாநிலம் முழுவதும் சட்டம்-ஒழுங்கை பேணும் காவல் துறை பணிகளுக்கான உட்கட்டமைப்பு மற்றும் உபகரணங்களை மேம்படுத்த தமிழக அரசு தொடர்ந்து பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக, 2025–2026 ம் ஆண்டுக்கான காவல்துறை மானியக் கோரிக்கையில் பெண்கள் பாதுகாப்பிற்கென புதிய ரோந்து வாகனங்கள் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
அதன்படி, ரூ.12 கோடி மதிப்பில் 80 இளஞ்சிவப்பு நிற ரோந்து வாகனங்கள் கொள்முதல் செய்யப்பட்டு, பெண்கள் பாதுகாப்பை உறுதி செய்யும் சிறப்பு பணிகளுக்காக ஒதுக்கப்பட்டுள்ளன. இவை தாம்பரம், ஆவடி, சேலம், கோயம்புத்தூர், திருப்பூர், திருச்சி, திருநெல்வேலி மற்றும் மதுரை மாநகரப் பகுதிகளில் 24 மணி நேரமும் ரோந்து பணி மேற்கொள்ளவுள்ளன.
பெண்கள் எதிர்கொள்ளும் அவசர நிலைகளில் உடனடி உதவி வழங்கவும், பொது இடங்களில் பாதுகாப்பான சூழல் உருவாக்கவும் இவை பெரிதும் உதவும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்நிகழ்ச்சியில் தலைமைச் செயலாளர் முருகானந்தம், உள்துறைச் செயலாளர் தீரஜ் குமார், மாநில காவல் துறைத் தலைவர் வெங்கடராமன் உள்ளிட்ட பல உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
ஐப்பசி மாசத்துல இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட மழை
ஐப்பசியில இந்த 6 ராசிக்காரங்க யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க
வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!