டெல்லியில் செங்கோட்டை அருகே நடந்த கார் குண்டு வெடிப்பு சம்பவத்தில் உயிரிழந்ததாக கூறப்படும் மருத்துவர் உமர் நபியின் அடையாளத்தை உறுதி செய்ய அவரது தாயிடம் இருந்து டிஎன்ஏ மாதிரி சேகரிக்கப்பட்டுள்ளது.
கடந்த திங்கள்கிழமை மாலை வெடித்து சிதறிய ஹூண்டாய் ஐ-20 கார், காஷ்மீரின் புல்வாமாவைச் சேர்ந்த மருத்துவர் உமர் நபி என்பவரால் ஓட்டப்பட்டது என சிசிடிவி காட்சிகள் மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளது. அந்த வெடிப்பில் 12 பேர் உயிரிழந்தனர், பலர் காயமடைந்தனர்.

வெடிப்புக்குப் பிறகு கார் முழுவதும் சிதைந்து உடல்கள் அடையாளம் காண முடியாத நிலையில் லோக் நாயக் மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளன. இதையடுத்து டிஎன்ஏ மூலம் அடையாளம் காணும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
உமர் நபி சம்பவ இடத்தில் உயிரிழந்தாரா, அல்லது வெடிப்புக்குப் பிறகு தப்பியோடியாரா என்பது குறித்து இதுவரை தெளிவு இல்லை. இதனை உறுதி செய்ய புல்வாமா அருகிலுள்ள கோயில் கிராமத்தில் வசிக்கும் அவரது தாயிடம் இருந்து டிஎன்ஏ மாதிரி நேற்று சேகரிக்கப்பட்டது என தகவல்கள் தெரிவிக்கின்றன.
அந்த மாதிரியை டெல்லியில் சேகரிக்கப்பட்ட உடல்களின் டிஎன்ஏவுடன் ஒப்பிடும் பணி தொடங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் உமர் நபி உயிரிழந்தாரா, அல்லது இன்னும் உயிருடன் உள்ளாரா என்பது விரைவில் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதே வழக்கில் ஏற்கனவே கைதான மற்றொரு மருத்துவர் முசாம்மில் அகமது கூட புல்வாமா மாவட்டத்திலுள்ள அதே கோயில் கிராமத்தைச் சேர்ந்தவர் என்பதும் விசாரணையில் வெளிவந்துள்ளது. இருவரும் ஹரியானாவின் அல்-பலா மருத்துவக் கல்லூரியில் பணியாற்றி வந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
ஐப்பசி மாசத்துல இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட மழை
ஐப்பசியில இந்த 6 ராசிக்காரங்க யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க
வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!