விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயிலில் இரு காவலாளிகள் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை கடும் விமர்சனம் எழுப்பியுள்ளார்.
எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில் அவர், “இந்து அறநிலையத் துறை பராமரிப்பில் உள்ள கோயிலில் பாதுகாப்பு பொறுப்பில் இருந்த இருவர் கொலை செய்யப்பட்டிருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. கோயில்களில் இரவுப் பாதுகாப்பு பணிக்காக காவல்துறை ஏன் நியமிக்கப்படவில்லை?” என கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும், இந்து சமய அறநிலையத் துறை அமைச்சருக்கு கோபாலபுரம் குடும்பத்துக்கு முறைவாசல் செய்யவே நேரம் சரியாக இருக்கிறது என்று சாடியுள்ள அவர், திமுக ஆட்சியில் கொலைகாரர்கள், கொள்ளைக்காரர்கள் சுதந்திரமாகச் சுற்றி வருவதாகவும், தமிழகம் சமூக விரோதிகளின் சொர்க்கபுரியாக மாறியுள்ளதாகவும் குற்றம்சாட்டியுள்ளார்.
அதேபோல், “அரசுக்கும் காவல்துறைக்கும் குற்றவாளிகள் பயப்படாத நிலை உருவாகி விட்டது. நான்கரை ஆண்டுகளாகச் செயல்படாததால் முதலமைச்சர் ஸ்டாலினின் இரும்புக்கரம் இப்போது துருப்பிடித்துவிட்டது,” என பதிவில் கடுமையாக விமர்சித்துள்ளார்.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
ஐப்பசி மாசத்துல இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட மழை
ஐப்பசியில இந்த 6 ராசிக்காரங்க யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க
வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!